ஞானப்பிரகாச சுவாமிகள் (1875 - 1917) (

)

தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அரும்பாடு பட்டவர்களுள் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச சுவாமிகளும் ஒருவர் ஊர்க்காவல் துறையில் பணியாற்றிய இவர், தம் பணியைத் துறந்தாரேயன்றித் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றைத் துறக்கவில்லை. இலத்தீன், கிரேக்கம் முதலாய பதினெண்மொழிகளில் எழுதவும் பேசவும் வல்லவராயிருந்தார். தமிழ் அமைப்புற்ற வரலாறு போன்ற பல தமிழ் நூல்களின் ஆசிரியர் இவர். "சொற்பிறப்பு ஒப்பியல் அகரவரிசை" என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.

அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ்மொழியின் கட் பொருந்திய அழகுகளுள் ஒன்று யாதெனில், அதன் பன்னு‘ற்றுத் தொகைப்பட்ட சொற்களிற் பெரும் பங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம். இச் சிறப்பினைப் பண்டை இலக்கண நூலாசிரியர் சிறுபான்மையும், எங்காலத்து அகலறிவாளர் சில்லோர் பெரும்பான்மையும் எடுத்துக்காட்டலுற்றார். தமிழ்ச் சொற்பரப்பு முழுதினையும் ஒப்புநோக்கி அடைவுபடநிறீஇ. பிறபெரும் மொழிகளோடும் ஊடாடிய நுண்ணறிவு கொண்டு ஆராயுமிடத்து, முற்கூறிய பலப்பல சொற் கூட்டங்களானவற்றுள் குடும்பச் சாயல் பொன்றதோர் ஒற்றுமை நயம் வெளிப்பட்டு, அக்கூட்டங்கள், தமமிலும் தொகை சுருங்கிய வேறு கூட்டங்களின் உறுப்புக்களாய் நிற்றல் தெளிவுறும்.
- ஞானப்பிரகாசர்.

Site Meter