புதுமைப்பித்தன் (1906 - 1948) (

Puthumai Pithan

)

சொ. விருத்தாசம் என்ற இயற்பெயரையுடைய புதுமைப்பித்தன் வளர்ந்து வரும் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி எனலாம். பட்டப்படிப்பிற்குப்பின் எழுத்துப்பணியையே முழுநேரப் பணியாக மேற்கொண்டு எண்ணற்ற சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பெற்ற இவர் கதைகள் பல்லோராலும் போற்றப் பெறுகின்றன.

" அன்று விநாயக சதுர்த்தி. நான் பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டிவந்த சணல் நூல்களை யெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம் பட்டணத்திலே மாவிலைகூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். " என்ன மாவிலைக்குமா விலை ?" என்று பிரமித்துப் போகாதீர்கள். மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலிகொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி, இந்த "உழைப்பின் மதிப்பை" அந்த இலையின் மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் "விலை" என்பது."

- புதுமைப்பித்தனின் (விநாயக சதுர்த்தி)

Site Meter