தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (1904 - 1965) (

Bhaskara Thondaiman

)

கலைமணியான தொண்டைமானின் கண்கள் தமிழும் கலையுமாகும். இளவயதிலேயே இலக்கியத்தின் பால் ஈடுபாடுகொண்டு ரசிகமணியின் "வட்டத் தொட்டி" யில் அதை வளர்த்துக் கொண்டவர். மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் புகுந்து, இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவராக ஓய்வு பெற்றவர். இவர் கால்படாத கோயில் தமிழ் நாட்டில் இருக்கின்றதா என்பது ஐயமே. " வேங்கடம் முதல் குமரிவரை " என்ற இவர்தம் நூல், பக்திச் சுவையும் கலைச்சுவையும் விரவி எழுதப் பெற்றது. இது போன்ற பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

" குன்று தோறாடும் குமரன் இருக்கும் இடங்கள் எல்லாம் உங்களை இழுத்தடிக்கப் போவதில்லை. குன்றைவிட்டு இறங்கி, வற்றாது வளம் பெருக்கும் காவிரி பாயும் சோழ வளநாட்டில் வந்து குந்தியிருக்கும் கோலக் குமரனிடமே தங்களை எல்லாம் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். முதலில் காவிரியின் கிளை நதியான அரிசிலாற்றங்கரையிலே இருக்கும் தாராசுரத்திற்கே போவோம்... "

- தொ.மு. பா. வின் - வேங்கடம் முதல் குமரிவரை.

Site Meter