விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் நாயகி சினேகா?

விஜய்யின் ‘தளபதி 68’ பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் ‘தளபதி 68’ படம் உருவாகவுள்ளது. இந்தப்படத்திற்கான வேலைகள் துவங்கி விட்டாலும், படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் உள்ளனர் படக்குழுவினர். ‘லியோ’ பட ரிலீஸ் வரை ‘தளபதி 68’ படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். ‘தளபதி 68’ படம் தொடர்பான தகவலகள் வெளியாகி விட்டால், ரசிகர்களுக்கு ‘லியோ’ படம் மீதான எதிர்பார்ப்பு கம்மியாகி விடும் என்பதால் தளபதி இந்த முடிவில் இருக்கிறார்.

‘லியோ’ படப்பிடிப்பின் போதே ‘தளபதி 68’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. யாருமே எதிர்பாராத கூட்டணி இணைந்துள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் கலகலப்பான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் விஜய். அது மட்டும் இல்லாமல் இவர் ஏகேவை வைத்து ‘மங்காத்தா’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர். இவருடன் விஜய் இணைந்துள்ளது தான் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனிடையில் ‘தளபதி 68’ மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. ஜெய், பிரபுதேவா, மாதவன், பிரசாந்த் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் இந்தப்படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்து பட்டிமன்றம் வைக்காத குறையாக ஒரு விவாதம் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜோதிகா இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து சிம்ரனின் பெயர் அந்த லிஸ்டில் அடிப்பட்டது. இந்நிலையில் தற்போது சினேகா ‘தளபதி 68’ படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

அண்மையில் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சினேகாவுடன் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். இதனால் ‘தளபதி 68’ படத்தில் விஜய் ஜோடியாக சினேகா நடிப்பது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கூறி ஆரம்பித்து விட்டனர். ஆனால் இந்த புகைப்படம் ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்ததுள்ளது. இந்தப்படத்தில் வெங்கட் பிரபு, சினேகா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஆனாலும் ‘தளபதி 68’ படத்தில் விஜய், சினேகா இருவரும் இணைந்து நடித்தால் நல்லாருக்கும் என்பது ரசிகர்களின் ஆசை.