ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தை பீஸ்ட் படத்திற்கு பிறகு டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். தமன்னா படத்தில் இணைந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாக அவரது ஜெயிலர் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்னதாகவே ரஜினியின் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மிகவும் பிரம்மாண்டமான அளவில் ஜெயிலர் படம் உருவாகிவருகிறது.

முன்னதாக இந்தப் படத்தில் தமன்னாவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த செய்தியை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தமன்னாவின் புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் தற்போது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சுனில் கேரக்டர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டது சன் பிக்சர்ஸ். அந்த செய்தியும் புஷ்பா படத்தின்மூலம் கவனம் பெற்ற சுனிலின் கெட்டப்பும் ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் தமன்னா படத்தில் இணைந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.