சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொள்ளு!

கூடல் - 28 January, 2010
Horse gram (Kollu) controls diabetes - Food Habits and Nutrition Guide in Tamil

பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடே அடிப்படையான முக்கிய மருந்தாகும். பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், நேரடியாக சர்க்கரையை தவிர்ப்பார்கள். இது மிகவும் அவசியம்தான். மேலும் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. இதற்கு உணவில் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரும்.

குறிப்பாக, கொள்ளுப்பருப்பு நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற உணவு. இதில் எதிர் உயிர்ச் சத்துக்கள், நொதித்தலைத் தடுத்தல், புரதத்தில் உள்ள பைட்டேன், டேனின் போன்றவை உணவின் தன்மையைச் சீர்படுத்துதல் போன்ற காரணங்களால் கொள்ளு மிகவும் ஏற்ற உணவாகும். பல்வேறு செயல்முறை ஆய்வுகள் மூலம் கொள்ளுவில் மிகக் குறைந்த சர்க்கரையே உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பருப்பிலுள்ள நார்ச்சத்துக்கள் அதிகமான பாகுத்தன்மையுடன் இருப்பதால் உணவு செரித்தலைத் தாமதப்படுத்துகிறது. ஆய்வின் மூலம் ரத்தத்தில் கிளைசிமிக்கின் அளவு கொள்ளுப் பருப்புக்கு 63 ஆகவும், சோயா மொச்சைக்கு 74 அளவாகவும் உள்ளது.

உணவு உண்டவுடன் செரிக்கும்போது சர்க்கரையின் அளவை வெளிப்படுத்துவதில் பயறு வகைகள் மூன்று நிலைகளாக செயல்படுகின்றன. முளைகட்டிய பயறு வகைகளை உண்டால், அவை குறைந்த அளவு சர்க்கரையையே நீண்ட நேரம் வெளியிடும். எனவே, இந்த வகையில் பயறுகளை உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் ரத்தக் கலப்புக் கட்டுப்பாட்டுக்குப் பாதுகாப்பானதாக அமைகிறது. கொள்ளுப் பருப்பில் சர்க்கரையின் அளவு குறைந்தே காணப்படுவதால், இதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பயறு வகைகளை வடை போன்று சமைத்து சாப்பிடும்போது முதல் நிலையை விட சற்று அதிகமாக சர்க்கரை வெளிப்படும். பயறு வகைகளை உண்பதன்மூலம் இன்னும் அதிக அளவு சர்க்கரை, குறைந்த நேரத்தில் வெளியாகும். எப்படியாயினும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் நன்மை ஏற்படும். முளைகட்டிய பயறு வகைகளாலும் கூடுதல் பலன் உண்டு. அதனால் நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரையை குறைத்து கொள்ளுவை உணவில் சேர்ப்பது நல்லது.

நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் உப்பு சாதாரண உப்பாகும். இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு. ஆனால் நமக்கு அயோடின் சத்து தேவை என்பதால் அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும். நமது உடலில் உள்ள தைராக்சின் என்ற முக்கியமான நீர் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் தைராய்டு சுரப்பி வீங்கி முன்கழுத்துக்கழலை என்ற நோய் ஏற்படும். அயோடின் சத்து இல்லாவிட்டால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். நரம்புச் செயல்களும் குன்றிப் போகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைந்தால் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சிக் குறைவுடன் பிறக்கும். மேலும், மூளையில் உள்ள நியூரான்களின் தொடர்பு குறைவதால் மந்தப் புத்தி ஏற்படும். நமக்கு சராசரியாக 1 மி.கி. அளவுக்கு அயோடின் சத்து தினசரி தேவைப்படுகிறது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் அளவு வெறும் 400 மைக்ரோ கிராம் மட்டுமே. இன்றைய நிலையில் அயோடின் உப்பு அனைவருக்கும் அவசியமாகும்.


உணவு பழக்கம்