மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
அன்புள்ள மகர ராசி நேயர்களே!
உங்கள் ராசிக்கு குருபகவான் 15-12-2009-ல் 2-ஆம் இடத்தில் பெயர்ச்சியாகிறார். 2-ஆம் இடம் என்பது குருபலம் பெறுகிற இடமாகும். குருபலம் பெற்றல் பல நன்மைகள் உங்களுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கப் போகிறது. தேவைகள் பூர்த்தியாகும் நேரம் தனவரவு கிடைத்து செலவுகள் செய்தாலும் தெரியாது. கிளைகள் தொடங்க நேரம் இது. கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். கல்வியில் ஊக்கம், சாஸ்திரங்களை அறிந்தவராகவும், அழகான தோற்றம், காரியங்களை முடிப்பதில் வல்லவராகவும், உறவினர்களிடமும் நல்ல முறையில் பேசி பழகும் குணம் இருக்கும். நல்ல மனநிலையில் செல்வம் சேர்க்கும் மனோபாவம் காணப்படும்.
பொதுப்பலன்கள்: இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் இக்காலங்களில் திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றமும், உத்தியோக வகையில் தாமதம் அடைந்து வந்த பதவி உயர்வுகள் வந்து சேரும்படியான சூழ்நிலையும், செய்தொழில் ஜீவன வகையில் மேன்மையும், தேவைக்கேற்ற பணவரவும், பழைய கடன்காட்சிகள் படிப்படியாக விலகும்படியான சூழ்நிலையும், புதிய வாய்ப்புகளும் இதன் தொடர்பான பயணங்களால் அனுகூலமும், தேவைக்கேற்ற பணவரவும் வந்து சேரும். குடும்பத்தில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிறைவேறுவதுடன் ஷேத்திராடன பயணங்களும், ஸ்திர சொத்து சேர்க்கைகளும் அமையக்கூடும். குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஆறாம் இடத்தையும், ஏழாம் பார்வையாக எட்டாம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக பத்தாம் இடத்தையும் பார்வையிடுவதால் கடன் காட்சிகள் விலகி வரவேண்டிய தொகை வந்து சேரும் பாக்கியமும், நீண்டநாளாக இருந்து வந்த நோய் நொடிகள் விலகி உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில்கள் சம்பந்தமான முயற்சிகளில் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமையும். சமுதாயத்தில் உங்களுடைய கௌரவம், புகழ் செல்வாக்கு கூடும் காலமிது.
உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் வகையில் இருந்து வந்த விரோதங்கள் விலகும்படியான சூழ்நிலையும், சக ஊழியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் செயல்படும் பாக்கியமும், தாமதம் அடைந்து வந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேண்டிய இடமாற்றங்கள் வந்து சேரும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். ஒரு சிலருக்கு உத்தியோக சம்பந்தமாக கடல் கடந்து வெளியூர்-வெளிநாடு செல்லும்படியான வாய்ப்புகள் உருவாகும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தாமதப்பட்டு இருந்த பிரச்சினைகள் அனுகூலத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன் உதவி கைக்கு வந்து சேரும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றியும், இதன் தொடர்பான பயணங்களிலும் வெற்றி ஏற்படும்.
தொழில், வியாபாரிகளுக்கு: தொழில் வியாபார வகையில் தொழில்களில் இருந்து வந்த போட்டி-பொறாமைகள் படிப்படியாக விலகி சகல காரியங்களிலும் படிப்படியான முன்னேற்றமும், உழைப்புக்கேற்ற லாபமும் ஏற்படும். பழைய கடன்காட்சிகளைப் பற்றிக் கவலைப்படும்படியான அவசியமில்லை. வங்கிகளில் எதிர்பார்க்கும் கடன் தொகைகள் கைக்கு வந்து சேர்ந்து புதிய தொழில்களில் ஈடுபடும்படியான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக விலகி நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் கை கொடுக்கும். இயந்திரம், இண்டஸ்ட்ரீஸ், வண்டி வாகனம் போன்ற தொழில்களிலும் எதிர்பாராத வகையில் அனுகூல திருப்பங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் வகையில் இருந்து வந்த விரோதங்கள் மறைந்து கூட்டுத் தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அனுபவபூர்வமாக அமையும்.
மாணவர்களுக்கு: மாணவர்களுக்கு வித்தியாபி விருத்தியில் முன்னேற்றம் உண்டாகும். டிபார்ட்மெண்ட் சம்பந்தமான படிப்பில் ஈடுபாடு கொள்ளும் சந்தர்ப்பமும், அதன் மூலம் வெற்றியும் இதன் காரணமாக பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவைகளும் வந்து சேரும். படித்துக்கொண்டே பகுதி நேர உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பணியில் நிரந்தரமாக ஈடுபடும்படியான சூழ்நிலையும், இதன் தொடர்பான பயணங்களில் வெற்றியும் ஏற்படும்.
குடும்பம்: குடும்பத்தில் ஒற்றுமையும், சண்டை, சச்சரவு காரணமாக பிரிந்து இருந்தவர்களும், இக்காலத்தில் ஒன்று கூடி வாழும் பாக்கியமும், பூர்வீக ஸ்திர சொத்துக்களின் மீது ஏற்பட்ட கடன்காட்சிகளும் படிப்படியாக குறைவதுடன் வீடு, நிலம், வாங்கல் விற்றல் ஆகிய முயற்சிகளில் எதிர்பாராத லாபம் உண்டாகும். திருமணம் தாமதப்பட்ட இந்த ராசி ஆண்-பெண்களுக்கு விவாஹப்ராப்தமும், குடும்ப வாழ்க்கையும், ஸ்திர சொத்து சேர்க்கையும் ஏற்படும். தாமதம் அடைந்த குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பும், குடும்பத்துடன் வெளியூர் பயணமும், சுபகாரிய-சுபவிரயங்களில் உற்சாகமாக ஈடுபடும் சூழ்நிலையும் அமையும். இந்த ராசி பெண்களுக்கு இக்காலத்தில் எல்லா வகையிலும் முன்னேற்றமும், எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலமும், வெகு நாட்களாக சுணங்கியிருந்த எதிர்பார்க்கும் தகவல் வந்து சேரும். நூதனமான பொருள் சேர்க்கை, ஆடை-ஆபரண சேர்க்கை ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சகல காரியங்களிலும் முன்னேற்றம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு: அரசியல், பொதுச் சேவையில் இருந்து வந்த எதிர்ப்புகள் மாறி சுபிட்சமான சூழ்நிலையும், வெளிவட்டாரத்தில் நல்ல புகழும், அபிவிருத்தியும் அடையும். வெளியூர் பயணங்களின் மூலம் திட்டமிட்டபடி வெற்றியும், புதிய நூதனமான முயற்சிகளின் மூலம் மேலிடத்தின் செல்வாக்கு அபிவிருத்தி அடையும். நல்ல நண்பர்களின் சேர்க்கையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். புதிய முயற்சிகளில் தாமதம்-தடை போன்ற சங்கடங்கள் காணப்பட்டபோதிலும் உடனுக்குடன் நிவாரணம் ஏற்படும். தசாபுக்தி சாதகமாக அமைந்து இருப்பவர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்பு முதலியவைகளை அடையும் பாக்கியமும் ஏற்பட்டு விடும். மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கில்லை.
கலைஞர்களுக்கு: கலைஞர்களுக்கும், கலை சம்பந்தமான தொழில்களில் இருப்பவர்களுக்கும் தொழில் வகையில் முன்னேற்றமும், தனலாபமும் ஏற்படும. தொழில்களில் காணப்பட்ட போட்டி-பொறாமைகள் படிப்படியாக விலகி அமைதியும், இனிமையுமான சூழ்நிலை உருவாகும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பழைய கடன் காட்சிகளை பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. புதிய வாய்ப்புகளில் ஈடுபடும்படியான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான பயணங்களின் மூலம் முன்னேற்ற சூழ்நிலை உருவாகும். தசாபுக்தி சாதகமாக அமைந்து உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் விருது பெறும் வாய்ப்பு உண்டாகும். புதிய நண்பர்களால் காரியானுகூலம் ஏற்படும்.
விவசாயிகளுக்கு: விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் யாவும் விலகித் தொழில் மேன்மையும், தேவைக்கேற்ற பணவரவும் வந்து சேரும். வங்கிகளில் எதிர்பார்க்கும் உதவித் தொகைகள், தொழில் உபகரணங்கள் திட்டமிட்டபடி கைக்கு வந்து சேர்ந்து புதிய தொழில்களில் ஈடுபடும்படியான சூழ்நிலை உருவாகும். புதிய நிலம் சேர்க்கை, குத்தகை நிலங்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றி உண்டாகும். தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு ஸ்திர சொத்து சேர்க்கையும், வண்டி வாகன சேர்க்கையும் ஏற்படும். நெல், கரும்பு, புஷ்பம், பருத்தி போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இக்காலங்களில் சகல முயற்சிகளிலும் முன்னேற்றமும், எதிர்பார்க்கும் லாபமும் வந்து சேரும்.
சிறப்புப் பலன்கள்:
15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் சுக-லாபாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனம் அமையும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் லேசாக உடல்நிலை பாதிக்கும். அலைச்சல் இருக்கும். கோபத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் சேவக- விரயாதிபதியான குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் உதவுவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். உயர்கல்வி, உத்தியோகத்திற்கான பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள்.
4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் மறைவதால் செலவினங்களும், அலைச்சலும் இருக்கும். இளைய சகோதரர்களை அனுசரித்துப் போங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலகட்டத்தில் குரு பகவான் 3-ல் மறைந்தாலும் உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் அழகு, இளமை கூடும். தொட்டதெல்லாம் துலங்கும். புதுச்சொத்து வாங்குவீர்கள். வாகனம் சேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை கிடைக்கும்.
பரிகாரம்: இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அருகிலுள்ள புராதன சிவன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பது நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவர, நன்மைகள் தொடரும். கடன்கள் குறையும். தினமும் காகா உங்கள் வீட்டைத் தேடி வந்து, உரிமையுடன் உங்களின் சாப்பாட்டைச் சாப்பிட வரும்படியாக தினமும் பழக்கம் ஆக்கிக் கொண்டால், திருமணம் முடிவுக்கு வரும். தொழிலில் நிரந்தர வருமானம் வரும் சூழ்நிலை உருவாகிவிடும். சகோதரர்களிடையே இருந்து வரும் பகை விலகும்.