ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 5, 10, 13, 14, 15, 19, 22, 23, 28, 31.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 3, 4, 6, 7, 8, 12, 16, 17, 25, 26.
தாயாரின் உடல் ஆரோக்கிய வகையில் கவனம் தேவை. வீடு, வாகனங்களால் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் இனம் புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் குழப்பங்களும், புதிய புதிய விரோதங்களும், எந்த விஷயத்திலும் சுதந்திரமாக செயல்பட முடியாத சங்கடங்களும் ஏற்படும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் மறைமுக-நேர்முக எதிர்ப்புகளால் சங்கடங்களும், பழைய கடன்காட்சிகளால் நெருக்கடியான சூழ்நிலையும் காணப்படுவதால் சகல காரியங்களிலும் திட்டமிட்டு செயல்படுவதும், தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதும் உத்தமம். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகள் வகையில் சகஜநிலையை வளர்த்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இனம்புரியாத குழப்பம், ஒற்றுமைக்குறைவு, அலைச்சல்-திரிச்சல்களால் விரயங்கள் காணப்படுவதால் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு தொழில்களில் போட்டி-பொறாமைகள் காணப்படுவதால் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சகல காரியங்களில் வெற்றி உண்டாகும்.
பிப்ரவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 5, 6, 10, 13, 14, 15, 19, 22, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 7, 16, 25.
குடும்பத்தில் உள்ளோரிடம் வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்வோர், கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனக்குறைவு, இனம்புரியாத குழப்பம், அச்சம்-திகில் நிறைந்த மனநிலையும், எந்தக் காரியத்திலும் ஈடுபட முடியாதபடி சிக்கல்களும் காணப்படுவதால் சகல காரியங்களிலும் நிதானமுடன் செயல்படுவது அவசியம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் பொருளாதார சிரமமும், கொடுக்கல்-வாங்கல் வகையில் சிக்கல்களும், வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதம் முதலிய சங்கடங்கள் உருவாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் சுமூகமான சூழ்நிலையுடன் செயல்பட முடியாத வகையில் தாமதமும்-தடைகளும் ஏற்படும். குடும்பத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவினங்களும், சிர்திருத்தக் காரியங்களில் பொருளாதார நெருக்கடியும், பயணங்களால் அலைச்சல்-திரிச்சல்களும் உண்டாகும். கலைஞர்களுக்கு தொழில் முன்னேற்றமும், தேவைக்கேற்ற பணவரவும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு மறைமுக-நேர்முக எதிரிகளால் விரோதங்கள் காணப்படுவதால் சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை.
மார்ச்
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 22, 24, 31.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 2, 3, 7, 8, 9, 16, 17, 18.
வாகனங்கள் ஓட்டும் போது கவனம் மிகமிக அவசியம். சிலருக்கு விருப்பமில்லாத இடங்களில் சென்று எச்சரிக்கும் நிலை ஏற்படும். மனைவி வழி உறவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வேண்டாத விவாதங்களை தவிர்ப்பது அவசியம். உத்தியோகத்தில் உற்சாகமாக செயல்பட முடியாத தடைகளும், மேலதிகாரிகள் வகையில் வீண்விவாதங்களை குறைத்துக் கொள்வதும், சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை அபிவிருத்தி செய்து கொள்வதும் அவசியம். புதிய உத்தியோக முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் பழைய கடன் காட்சிகளால் சங்கடங்களும், அலைச்சல்களால் பொருள் விரயமும், வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் சகஜநிலையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவினங்களும் வாக்குக்கு மதிப்பற்ற சூழ்நிலையும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புக்கள் வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு போட்டி-பொறாமைகளால் சகல முயற்சிகளிலும் தாமதம்-தடைகள் உண்டாகும்.
ஏப்ரல்
அதிருஷ்ட நாட்கள்: 4, 6, 13, 15, 22, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 1, 7, 8, 10, 17, 19, 26.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரக்கூடும். மறைமுக-நேர்முக எதிரிகளை பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதுநாள் வரையில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். உத்தியோகத்தில் குழப்பங்களுக்கு குறைவில்லை. மேலதிகாரிகள்-சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை கடைபிடிக்கவும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபார வகையில் எதிர்பாராத முன்னேற்றமும், புதிய துறைகளில் ஈடுபடும் பாக்கியமும் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களில் சமீபகாலமாக நிலவிய பொருளாதார சிரமங்கள், படிப்படியாக விலகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் சகஜநிலையும், லாபமும் ஏற்படும். குடும்பத்தில் தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் நிறைவேறும் பாக்கியமும், உறவினர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகளும் வந்து சேரும். பெண்களுக்கு பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கு தொழில் மேன்மை, ஸ்திர சொத்து சேர்க்கை, வண்டி வாகன சேர்க்கை அமையும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு எதிரிகள்-எதிர்ப்புகள் விலகி சகல காரியங்களிலும் மேன்மையும், மேலிடத்தின் ஆதரவும் அனுபவபூர்வமாக வந்து சேரும்.
மே
அதிருஷ்ட நாட்கள்: 4, 6, 13, 15, 19, 24, 27, 28, 31.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 1, 9, 10, 11, 18.
உடல் ஆரோக்கிய வகையில் கவனமுடன் இருப்பது அவசியம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேரும். பதவி உயர்வு இடமாற்றம், மேலதிகாரிகள் ஒத்துழைப்பு பாராட்டு உண்டாகும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் கை கொடுக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் வந்து சேரும். அரசுத்துறை, வங்கி முதலியவைகளின் உதவியுடன் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை, ஒற்றுமை அதிகரிக்கும். தாமதம் அடைந்து வந்த சுபகாரிய-சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும். பெண்களுக்கு உற்சாகமான மனநிலை, உடல் ஆரோக்கிய மேன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிருஷ்டம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும். அரசியல் பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு சங்கடங்கள்-பிரச்சினைகள் காணப்படுவதால் மேற்கொள்ளும் சகல காரியங்களிலும் பொறுமை, நிதானமுடன் செயல்படுவது அவசியம்.
ஜூன்
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 9, 10, 13, 15, 18, 22, 23, 24, 28.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 7, 8, 16, 17, 25, 26.
குடும்பத்தில் தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் நடைபெறும். ஒரு சிலருக்கு தூரதேச பயணங்கள் அமையும். மனதில் தைரியம் மேலோங்கி நிற்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாமதப்பட்டு இருந்த பிரச்சினைகள் அனுகூலத்தை ஏற்படுத்தும். எதிர்பார்க்கும் கடன்தொகை வந்து சேரும். சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டு இருந்த சிக்கல்கள் தீரும். புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு உத்தியோக வாய்ப்பு வந்து சேரும். சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் கை கொடுக்கும். தொழில் சம்பந்தமாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக விலகி நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். இதன் வகையில் இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். கூட்டுத் தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அனுபவபூர்வமாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய சுபநிகழ்ச்சிகன் நிறைவேறும். உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். பெண்களுக்கு நூதனமான பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை, பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு போட்டி பொறாமைகள் படிப்படியாக விலகி முன்னேற்ற சூழ்நிலை உண்டாகும்.
ஜூலை
அதிருஷ்ட நாட்கள்: 2, 9, 18, 23, 27, 29, 30.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 7, 8, 16, 17, 25, 26.
வரவுக்கு மீறிய செலவுகள் காணப்படுவதால் சகல முயற்சிகளிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதும், தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதும் உத்தமம். உத்தியோகத்தில் இந்த மாதம் சகல முயற்சிகளிலும் அனுகூல திருப்பங்கள் உண்டாகும். உடனிருந்து பணிபுரிபவர்களிடமும், பெண்களிடமும் எச்சரிக்கை உணர்வோடு பழகுவது நல்லது. மறைமுக-நேர்முக எதிர்ப்புகள் விலகி சுமூகநிலை அமையும். கடினமான காரியங்கள் கூட எளிதாக நிறைவேறும். ஒரு சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, இடமாற்றம், தாமதப்பட்டு வந்த கடன் உதவி வந்து சேரும். சுயதொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேருவதில் காலதாமதமும், பழைய கடன்காட்சிகளால் நெருக்கடிகளும், முயற்சிகளில் தடங்கல்களும் உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையையும், சகஜநிலையையும் அபிவிருத்தி செய்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் அமைதிக்கு பங்கமும், சிற்சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. செலவுகள் அதிகமாகும். கையிருப்பு குறையும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் முன்னேற்றமும், ஓரளவு லாபமும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
ஆகஸ்ட்
அதிருஷ்ட நாட்கள்: 5, 14, 19, 28.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 6, 15, 24.
பணப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போகும் சூழ்நிலையும் பெண்கள் வகையில் தொல்லைகளும் வரக்கூடும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளில் அதிக கவனம் தேவை. மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கில்லை. உத்தியோகத்தில் அலைச்சல்-திரிச்சல்களும், எதிர்பாராத சிரமங்களும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். முக்கியமான காரியங்களில் ஈடுபட முடியாதபடி நெருக்கடிகள் உண்டாகும். சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் வகையில் சிக்கல்களும், வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேருவதில காலதாமதமும் உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் சகஜ நிலையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். குடும்பத்தில் உடனடி தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடும்படியான சூழ்நிலையும், உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதம் உண்டாகும். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை. கலை சம்பந்தமான தொழில்களில் உள்ளவர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் புகழும், மேலிடத்தின் ஆதரவால் புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும்.
செப்டம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 23, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 7, 8, 16, 17, 25, 26.
இதுநாள் வரையில் இருந்த பிரச்சினைகளின் வேகம் குறையக்கூடும். குரு பகவானின் நிலையினால் வரவுக்கு மீறிய செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வகையில் வீண்விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளால் தாமதமும்-தடைகளும் வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதமும் ஏற்படும். புதிய தொழில்கள் அமைவதில் சிக்கல்கள் உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் மேன்மையும், தேவைக்கேற்ற பணவரவும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும், குதூகலமான சூழ்நிலையும் அமையும். தாமதம் அடைந்து வந்த சுபகாரிய-சுபச்செலவுகள் நிறைவேறி இதன் தொடர்பான பயணங்களில் வெற்றி உண்டாகும். பெண்களுக்கு முயற்சிகளில் அனுகூலத் திருப்பங்களும், பொருள் சேர்க்கையும் ஏற்படும். கலைஞர்களுக்கு எல்லா வகையிலும் அனுகூல திருப்பங்களும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி உற்சாகமான சூழ்நிலை, மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி, பொது ஜன செல்வாக்கு மேன்மை அடையும்.
அக்டோபர்
அதிருஷ்ட நாட்கள்: 6, 14, 15, 23, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 1, 10, 19, 28.
பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களது தெய்வ பலத்தால் அவை உடனுக்குடன் நீங்கி விடும். கல்வி கேள்விகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் ஒற்றுமையும், திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய உத்தியோக சம்பந்தமாக முயற்சி செய்து வருபவர்களுக்கு இன்டர்வியூ கார்டு வந்து சேரும். சுயதொழில், வியாபார வகையில் அனுகூலமான சூழ்நிலையும், புதிய நூதனமான தொழில்களில் ஈடுபடும் பாக்கியமும், எதிர்பார்க்கும் கடன் தொகைகளும் கைக்கு வந்து சேரும். கூட்டுத் தொழில்களில் ஒற்றுமையும் லாபமும் ஏற்படும். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவில்லை. தாமதம் அடைந்து வந்த சுபகாரிய-சுபச்செலவுகள் நிறைவேறும். உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் மேன்மையும், பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கையும் உண்டாகும். இது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். தொழில் மேன்மையும், தேவைக்கேற்ற பணவரவும், ஸ்திர சொத்து சேர்க்கைகளும் உண்டாகும். அரசியல் பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு புதிய நூதனமான முயற்சிகளில் ஈடுபடும் பாக்கியமும், வெளி வட்டாரத்தில் புகழும் செல்வாக்கும், அபிவிருத்தி அடையும்.
நவம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 6, 15, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 5, 14, 23.
உறவினர்கள் வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் திட்டமிட்டபடி வந்து சேரும். ஒரு சிலருக்கு பூமி நிலம் சேர்க்கை தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளன. உத்தியோக வகையில் முன்னேற்றமும், புதிய முயற்சிகளில் அனுகூலமும், பதவி உயர்வு, இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலத் தகவல்களும் வந்து சேரும். வெளியூர்-வெளிநாடு சம்பந்தமான உத்தியோக முயற்சிகளில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். சுயதொழில வியாபாரத்தில் பொருளாதார மேன்மையும், புதிய நூதனமான தொழில் துறைகளில் ஈடுபடும் வாய்ப்பும், கூட்டுத் தொழில்களில் முன்னேற்றமும், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களில் வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும் பாக்கியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள், நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். பெண்களுக்கு பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கை அமையும். முயற்சிகளில் பலிதம் ஏற்படும். கலைஞர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகளும் வந்து சேரும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கில்லை.
டிசம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 6, 15, 19, 24, 28.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்: 1, 2, 3, 4, 7, 8, 25, 26.
உடல் ஆரோக்கிய வகையில் மேன்மை ஏற்படும். சிலருக்கு வண்டி வாகன சேர்க்கை அமையும். மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். மறைமுக-நேர்முக எதிரிகள் வலு குறைந்து உங்கள் கை மேலோங்கி நிற்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வகையில் பாராட்டுக்களும், சகஊழியர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகளும் வந்து சேரும். புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்து இருப்பவர்களுக்கு வேலைக்கான இன்டர்வியூ கார்டு வந்து சேரும். சுயதொழில், வியாபாரத்தில் தொழில் மேன்மையும், வரவேண்டிய தொகை வந்து சேரும் பாக்கியமும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புக்களால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் சகஜநிலையும், தொழிலாளர்களுடன் ஒற்றுமையும் நீடிக்கும். குடும்பத்தில் அமைதியும், இனிமையும் நிறைந்து காணப்படும். உங்களுடைய வாக்குக்கு மதிப்பு உண்டாகும். தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் நிறைவேறும். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பும், தொழில் மேன்மை, சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புடையவர்களுக்கு தாமதம் தடைகள் விலகி மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.