துலாம் -

Libra 2011 Tamil Predictions

ஜனவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 11, 15, 19, 20, 24, 28, 29.

இந்த மாதம் 3, 4ம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும் சுக்ரனின் ஆசியோடு ஆரம்பம் ஆகிறது. பெண்கள் சொகுசு வாழ்க்கையையும், சுக போகத்தையும் அனுபவிப்பார்கள். மாணவர்களின் அழகு பொலிவையும், தோற்றம் கம்பீரத்தையும் பெறும். சூரியன் முன் பகுதியில், 3ம் வீட்டில் சுடர் விடுவதால், குழந்தைகளின் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் விலகி கல்விக்கான உதவிகளைப் பெறுவார்கள். பின் சூரியன் 4ம் வீட்டுக்கு மாறுவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டவர்களுடன் வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். மேலும் பிறரிடம் அதிகார மனப்பான்மையோடு பழகுவதைத் தவிர்க்கவும். செவ்வாய் 8ம் தேதி முதல் 4ம் வீட்டில் நிற்கிறார். சில தடைகளும், தாம் தங்களும் சுய தொழில் புரிபவர்களின் மனதை சோர்வடையச் செய்யும். 7ம் தேதி முதல் புதன் 3, 4 வீடுகளில் தங்குவதால், வியாபாரிகள், பேச்சைக்குறைத்து செயலில் கவனத்தைத் திருப்பினால், விரும்பிய லாபம் கிடைப்பது உறுதி. கலைஞர்கள் கடன் வாங்கி செலவு செய்வதைக் குறைப்பது அவசியம்.

பிப்ரவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 15, 19, 23, 24.

சூரியன் 4, 5 வீடுகளில் நிற்பதால், கடின உழைப்பும், žரான திட்டமிடலும் இருந்தால், உத்தியோகத்தில் இருப்பவர்களின் கௌரவமும், பதவியும் தானே உயரும். பெண்கள் வரவையும், செலவையும் žர்த்தூக்கிப் பார்த்து செயல்பட்டால், பொருளாதாரம் சறுக்காமல் இருப்பதோடு மன உளைச்சலும் இருக்காது. 15ம் தேதி முதல் செவ்வாய் பஞசம இடத்திற்கு மாறுகிறார். அவரோடு 18ம் தேதி முதல் புதனும் இணைவதால், வியாபாரிகள் உழைப்பு என்று ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது தேவையான ஓய்வை எடுத்துக்கொண்டால்தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கூட்டமாக செயல்படுபவர்கள் இடையே கருத்து வேறுபாடு உருவாகும் வாய்ப்பிருப்பதால், எதனையும் žர்த்தூக்கிப்பார்த்து செயல்படுவது நல்லது. சுக்ரன் 24ம் தேதி முதல் 4ம் இடத்திற்கு செல்கிறார். ஆதரவாளர்கள் காட்டும் உற்சாகத்தால் கலைஞர்கள் புதிய முயற்சிகளை மேன்மையான விதத்தில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். அத்துடன் இல்லத்தை கலைநயம் மிக்க பொருள்களைக்கொண்ட அலங்கரித்தும் மகிழ்வீர்கள்.

மார்ச்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24, 28.

சூரியன் முன் பகுதியில் 5ம் வீட்டில் நிற்கிறார். மாணவர்கள் சிறிய விஷயங்களையும் சிரத்தையுடன் செய்து வந்தால், சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் உங்களின் வாகனங்களைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருந்தால், வீண் செலவுகள் குறையும். பிறகு சூரியன் 6ம் வீடு போவதால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தொட்ட காரியம் யாவும் துலங்கும். பேச்சில் கம்பீரம் கூடும். செவ்வாய் 24ம் தேதி வரை 5ல். பெண்களுக்கு சற்றே பொறுப்புகள் அதிகரிக்கும். பிறகு செவ்வாய் 6ம் இடத்தில் இருப்பதால், இதுவரை கிடப்பில் போடப்பட்டு, மன உளைச்சலைத் தந்த வழக்குகள் சாதகமாக முடியும். 5ம் தேதி வரை 5ல் இருக்கும் புதன் 6ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை 6ம் வீட்டில் உலவுவதால், பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைந்து மகிழ்வார்கள். பிறகு புதன் 7ம் இடம் செல்வதால், பிறருக்கு விலையுயர்ந்த பொருட்களை இரவலாகத் தருவதை இதமாக மறுப்பது நல்லது. கலைஞர்கள் குடும்பத்துடன் விருந்து, விழா என்று வெளியூர்களுக்கு சென்று மகிழும் வாய்ப்புகள் இந்த மாதம் 4, 5 வீடுகளில் தங்கும் சுக்ரன் உருவாக்குவார்.

ஏப்ரல்

அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 13, 15, 19, 28, 30.

சூரியன் 6, 7 வீடுகளில் வசிப்பதால், மாத முன் பகுதியில் பொது வாழ்வில் இருப்பவர்களை பட்டமும், பதவியும் தேடி வரும். பிறகு சூரியன் 7ம் இடத்திற்கு போவதால், சிறு உடல் உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்க்கையோடு மோதலாம். வியாபார நிமித்தம் செல்லும் வெளியூர் பிரயாணங்களில் உங்கள் உடைமைகளை பத்திரமாக வைப்பது அவசியம். செவ்வாய் 25ம் தேதி முதல் வெற்றியை நல்கும் 6ம் வீட்டில் அமர்கிறார். படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்களின் வாட்டம் தீர, நல்ல வேலை கிடைக்கும். கடன் தொல்லைகள் குறைவதால், இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பீர்கள். 7ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். மாணவர்கள் வீண் வம்புகளை மௌனத்தால் வெல்வது புத்திசாலித்தனமாகும். நெருங்கிப் பழகி வந்த அக்கம் பக்கத்தார்கள், தேவையற்ற உளைச்சலை உண்டாக்கும் நிலை இருப்பதால், பெண்கள் அளவாகப் பழகுவது நல்லது. சுக்ரன் 16ம் முதல் 16ம் தேதி முதல் 6ம் வீட்டில் நிற்கிறார். கலைஞர்கள் வேலைகளை முழு ஆர்வத்துடன் செய்தாலும், எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு வருவதில் சற்று தொய்வு இருக்கும்.

மே

அதிருஷ்ட நாட்கள்: 1, 7, 10, 15, 16, 19, 24, 25, 28.

7ம் தேதி முதல் 7ம் இடத்திற்கு செல்லும் குரு, பெண்களுக்கு மனதுக்கிதமான சூழலையும், பிரியமானவர்களுடன் உறவாடி மகிழும் வாய்ப்பையும் உருவாக்குவதில் புத்துணர்ச்சியுடன் பணிகளில் இறங்குவார்கள். சுப காரியங்கள் நடப்பதற்கான காலம் கனிந்து வருவதால், மகிழ்வுடன் பணம் செலவழிக்கும் நிலையும் இருக்கும். சூரியன் 7, 8 வீடுகளில் சுற்றுவதால், பங்குதாரர்களின் செயல்பாடு, மற்றும் போக்கு கவலையை உண்டாக்கும் விதமாக இருக்கும். எனவே வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். செவ்வாய் 3ம் தேதி முதல், 7ம் வீட்டில் அடங்கிக் கிடப்பதால், சுயதொழில் புரிபவர்கள், சுய தொழில் புரிபவர்கள் சரக்குகளை தடையின்றி பெற, žரான திட்டத்தை மேற்கொள்வது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணி சுமை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நேரத்தோடு மோதாமல் பார்த்துக்கொண்டால், இல்லம் அமைதியாகத் திகழ்வதுடன், உறவுகளும் உங்களுக்காக பாடுபட முன் வருவார்கள். சுக்ரன் 6, 7 வீடுகளில் நிற்பதால், கலைஞர்கள், சோம்பலின்றி சுறுசுறுப்பாக பாடுபட்டால், வாய்ப்பும், அதிர்ஷ்டமும் தேடிவரும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படவும்.

ஜூன்

அதிருஷ்ட நாட்கள்: 5, 10, 12, 14, 19, 21, 23.

சூரியன் 8, 9 வீடுகளில் தூங்குகிறார். மாணவர்கள் வகுப்பறைகளில் அமைதியான போக்கை கடைபிடிப்பது முக்கியம். செவ்வாய் 12ம் தேதியிலிருந்து 8ம் வீட்டில் ஒளிந்திருப்பதால், வியாபாரிகள் தேவையற்ற வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கியிருப்பது புத்திசாலித்தனம். பணியில் இருப்பவர்கள் அதிக ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக செயல்பட்டால், அடுத்தவரின் நன்மதிப்பைப் பெறுவது எளிதாகும். 13ம் தேதி வரை 8ம் இடத்தில் நிற்கும் புதனுடன் 4ம் தேதி முதல் சுக்ரனும் சேர்வதால், சுய தொழில் செய்பவர்கள் கடன் பாக்கிகளின் வசூலை முடுக்கி விடுவதால், பெரும்பாலான தொகை கைக்கு வந்து சேரும். பின் புதன் 27ம் தேதி வரை 9ம் வீட்டில். பணம் புழங்கும் இடங்களில் இருப்பவர்கள் அவ்வப்போது வரவு செலவுகளை சரி பார்த்துக்கொண்டால், வீண் சந்தேகம் வளராமலிருக்கும். பின் புதன் 10ம் வீட்டுக்கு செல்வதால், தாய்மாமன் வழி உறவுகள் காட்டும் ஆதரவு கூடும். 6ம் தேதி முதல் ராகு 2ம் வீட்டிலும், கேது 8ம் வீட்டிற்கும் மாறுவதால், குடும்பத்தில் அவ்வப்போது எழும் சிக்கலை உடனுக்குடன் தீர்த்து விட்டால், ஒற்றுமை குலையாமலிருக்கும்.

ஜூலை

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 19, 24.

சூரியன் மாத முன் பகுதியில் 9ம் வீட்டில். கர்ப்பிணிப் பெண்கள் அஜ“ரணம், வயிற்று வலி ஆகியவற்றின் தொல்லையின்றி உடல் நலம் சிறக்க மிதமான உணவுகளை உண்டு வருவது நல்லது. பிறகு 10ம் இடம் செல்லும் சூரியன், வாகனம் வாங்கும் யோகத்துடன் புதிய ஒப்பந்தங்களையும் லாபகரமாக ஆக்கும் சூழலையும் உருவாக்குவதால், வியாபாரிகள் புதுத் தெம்புடன் வலம் வருவார்கள். செவ்வாய் 25ம் தேதி முதல் 9ம் இடத்திற்கு மாறுவதால், சிறு தொழில் புரிபவர்கள் நாணயமான பேச்சின் அடிப்படையில் பொருட்களை அளிப்பவரிடம் அனுசரித்து நடந்துகொண்டால், வருகின்ற லாபம் குறையாது. பணியில் இருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறான வேலைப்பளுவால், தொல்லைப்பட நேரிடலாம். புதன் 10, 11 வீடுகளில் உலா வருவதால், உடன் பிறப்புகளால், எழுந்த கருத்து வேறுபாடுகளை அவர்களே žர் செய்து, உறவுகளை இனிக்கச் செய்வார்கள். சுக்ரன் 9, 10 வீடுகளில் பயணம் செய்வது போல், கலைஞர்களும் புதிய ஊர்களுக்கும், இடங்களுக்கும் சென்று மகிழ்வார்கள்.

ஆகஸ்ட்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 28.

சூரியன் 10, 11 வீடுகளுக்கு உரிமை கொண்டாடும் சூரியன் பொது வாழ்வில் இருப்பவர்களின் மனதில் எதையும் சாதிக்க முடியம் என்கிற நம்பிக்கையை விதைப்பதால், துணிந்து செயல்பட்டு வெற்றியடைவீர்கள். வேலையில் இருப்பவர்கள் அதிகாரிகளின் நல்லெண்ணத்திற்கு பாத்திரமாவார்கள். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 9ம் வீட்டில் பயணம் செய்வதால், மாணவர்கள் கவனக்குறைவைத் தவிர்த்து செயல்பட்டால், தேர்வுகளை பயமின்றி எழுத இயலும். முதியவர்கள் இருதயம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை அவ்வப்பொழுது பரிசோதித்துக்கொள்வது அவசியம். 11ம் வீட்டில் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் இருந்து 27ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பிரச்சினைகளைக் கையாளுவார்கள். 17ம் தேதி முதல் 11ம் இடத்தில் வலம் வரும் சுக்ரன் கலைஞர்களின் தோற்றத்தை பொலிவாக ஆக்குவதுடன் உங்கள் வட்டத்தில் உங்கள் பெருமையையும் உயர்த்துவார்.

செப்டம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 24, 27, 28.

ஆதவன் முன் பகுதியில் 11ம் வீட்டில் பிரகாசிப்பதால், உயர்மட்டக் குழு விவாதங்களில் உங்கள் கருத்துக்கு நல்ல செல்வாக்கிருக்கும். பின் சூரியன் 12ம் இடத்தில் மறைவதால், மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை விடுத்து உங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்துகொண்டால்தான் எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படவும். செவ்வாய் 9ம் தேதி முதல் 10ம் இடத்தில் அமர்வதால், பொதுவாழ்வில் உள்ளவர்கள் பாடுபட்டு தேடிய நல்ல பெயரை பழுதாக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது. 21ம் தேதி வரை புதன் 11வீட்டில் பிரகாசிப்பதால், மேடைப்பேச்சுக்களிலும், போட்டிகளிலும் மாணவர்களின் திறமை ஜொலிக்கும். பிறகு புதன் 12ம் இடம் செல்கிறார். பணியில் உள்ளவர்கள் புதிய இடங்களிலும், புதிய மனிதர்களிடமும் கட்டுப்பாடாய் நடந்து கொண்டால் எந்த தொந்தரவும் இராது. சுக்ரன் 10ம் தேதி முதல் 12ம் இடத்திற்கு மாறுவதால், பெண்களுக்கு, கலைஞர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த விவகாரங்கள் எல்லாம் சுமூகமாக முடியும்.

அக்டோபர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 24, 28, 29.

சூரியன் 12, 1 வீடுகளில் நிற்பதால், மாணவர்கள் புதிய பொருட்களை வாங்கும் முன் அவற்றின் பயன்பாடு மற்றும் விதிமுறைகளை தெரிந்து வாங்கினால், பணம் விரையமாகாமலிருக்கும். வெளியூர்ப்பயணங்களால் வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் 29ம் தேதி வரைக்கும் 10ம் இடத்தில் நிற்பதால், பெண்கள் குடும்பத்தில் போட்டி மனப்பான்மை, கருத்து பேதம் ஆகியவை வளர இடம் கொடாதீர்கள். பிறகு செவ்வாய் 11ம் இடத்திற்கு மாறுவதால், ஓரளவு குடும்பத்தில் அமைதி தங்கும். புதன் 9ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை 1ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், கலைஞர்கள் திடமான மனதுடன் இருந்தால் நல்ல வழிகாட்டல் உங்களை மேலும் உயர்த்தும். பிறகு புதன் 2ம் இடத்தில் அமர்வதால், எல்லா தரப்பிலிருந்தும் வரும் நல்ல செய்திகளால் உங்கள் உற்சாகம் கூடும். இந்த மாதம் சுக்ரன் 1, 2 வீடுகளில் பயணம் செய்வதால், சுயதொழில் புரிபவர்களின் உழைப்பிற்குத் தகுந்த அளவிற்கு பாராட்டு அவர்களை தேடி வரும்.

நவம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 15, 19, 23, 24.

சூரியன் 1, 2 வீடுகளில் தங்கிச் செல்வதால், பெற்றோர்கள் பிள்ளைகளின் செலவுக்கு போதிய பணம் தந்தாலும், பணம் செலவழியும் வழிகளின் மீது கவனமாய் இருந்தால், அவர்களின் வழி மாறாமலிருக்கும். வேலையில் இருப்பவர்க்ள விடுபட்ட பணிகளை சிரமத்தின் பேரில் முடிக்க நேரிடும். செவ்வாய் இந்த மாதம் 11ம் இடத்தில் உள்ளார். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் அனைத்து வகையிலும் நன்மை கிடைக்கும். 2ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். மாணவர்களுக்கு பிடித்தமான நட்புடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழியும். பங்குதாரர்கள் காட்டும் ஆதரவால், வியாபாரிகள் புதிய திட்டங்களில் தைரியமுடன் இறங்குவார்கள். புதிய பொருட்களின் சேர்க்கையால் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி கூடும். 14ம் தேதி முதல் சனி பகவான் 1ம் வீட்டில் அமர்வதால், பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, சளி, காய்ச்சல் ஆகியவைகளின் பாதிப்பில்லாமலிருக்க, சுகாதாரமான குடி நீரை பயன்படுத்துதல் நலம். சுக்ரன் 2, 3 வீடுகளில் உலா வருவதால், கலைஞர்களுக்கு புதிய வீடு, வண்டி வாகன சுகம் என வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக விளங்கும்.

டிசம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 15, 18, 19, 27, 28.

சூரியன் முன் பகுதியில் 2ம் வீட்டில் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் வாக்குக் கொடுப்பற்கு முன் நிலைமையை ஆராய்ந்து செயல்பட்டால், யாருக்கும் எந்த மன வருத்தமும் நேராது. பின் சூரியன் 3ம் ஸ்தானத்திற்கு மாறுவதால், சுயதொழில் புரிபவர்களுக்கு தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி, மீண்டும் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். செவ்வாய் இந்த மாதமும் 11ம் வீட்டில் ஒளிர்வதால், சகோதர வழி உறவால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டுவதுடன், புதிய அறிமுகங்களும் கிட்டும். புதன் 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெற்று 2ம் இடத்தில் இருப்பதால், வியாபாரிகளுக்கு எதிர்பார்க்கும் இனம் கைக்கு வந்து சேருவதால், பாதியில் நின்ற பணிகளை முழுமையாக முடித்து லாபம் காண்பர். சுக்ரன் 3, 4 வீடுகளில் தங்குவதால், கலைஞர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு தகுந்த அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும்.

Site Meter