2009 - Mesham Tamil Rasipalan
எதிர்நீச்சல் போட்டபடி, வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டிக்கொண்டும், எது வந்தாலும் கலங்காமல் எதிர்த்து வாழ்ந்து வரும் 12 ராசிகளில் முதன்மையான ராசியாகிய மேஷ ராசி நேயர்களே! புத்தாண்டு வாழ்த்துகளோடு உங்களின் 12 மாத காலங்கள் எப்படி இருக்கும் என்பதை தெளிவாகக் காணலாம்.
படிப்பிலும் சரி, உத்தியோகத்திலும் சரி, செய் தொழிலிலும் சரி, பொதுநல சங்கங்களிலும் சரி, அரசியல் கட்சிகளிலும் சரி, தெய்வீக திருகோவிலின் நிர்வாகத்திலும் சரி, எதிலும் முதலிடம் முதல் மரியாதையும் கிடைப்பதற்கான உள் மனம் படைத்தவர் நீங்கள். உங்களை சுற்றி நண்பர்கள் வட்டம், உறவினர் வட்டம் என்று இருந்து வரும். ஆனாலும் அவர்களை சார்ந்து வாழ விரும்பமாட்டீர்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய நினைப்பீர்கள். மனைவியிடம் அதிகமான பாசம், பற்று இருந்து வரும்.
கடன் தொல்லை, வட்டியினால் விரோதம், கோர்ட், நோட்டீஸ், திடீர், திடீர் என உடல் ஆரோக்கியக் குறைவால் மருத்துவச்செலவு, கணவன்-மனைவிக்குள் போராட்டம், சொந்தக்காரர்களால் மனவேதனை, எதிலும் பிரச்சினை, அவமானம், தோல்வி என்று சந்தித்து கொண்டு மிக மோசமான சூழ்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்வரை இருந்து வந்த உங்களுக்கு 2009- புத்தாண்டு பலனை பார்க்கும் பொழுதும், வரும் 1.1.2009-ல் மிக முக்கிய கிரகங்களாக குருபகவான் 10-ம் பாவத்திலும், சனீஸ்வரன் 5-ம் பாவத்திலும், ராகு 10-ம் பாவத்திலும் கேது 4-ஆம் பாவத்திலும் கிட்டத்தட்ட 11-மாதங்கள் சஞ்சாரம் செய்து வருவதாலும் நீண்ட கால கிரகங்களான சனி, குரு, ராகு, கேது, குறுகிய கால கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன், போன்றவைகளின் ஆதிபத்தியம் ஆதிக்கம், பார்வை, யோகங்கள் போன்றவைகளையும் கணித்து பார்க்கும் போது இனிமேல் தற்போது பணவரவு பெருகும். செலவும், செல்வாக்கும் கூடும். மதிப்பும், மரியாதை ஏறும். தொழில் வாய்ப்பில் மாற்றம் ஏற்படும். வேலை இல்லாமல் இருந்தோருக்கு வேலை கிடைக்கும். படித்துவிட்டு சரியான தகுதியான வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டு வருவோருக்கு நீங்கள் எதிர்பார்த்தபடியே, வெளியூர், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சிறப்பு அழைப்பு, திடீர் என வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் குளிப்பாட்டும்.
நட்சத்திரங்கள் : அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம்
பெயர் எழுத்துக்கள் : சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ.
சிறப்பான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மே, ஆகஸ்ட், செப்டம்பர்.
சனவரி
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 16, 17, 18, 26, 27, 28.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 20, 21, 22.
ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் கூடி பாக்கியஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். மனதில் தெய்வ பக்தி மேலோங்கும். தைரியத்துடன் எக்காரியத்தையும் செய்வீர்கள். இதுவரையில் இருந்து வந்த காரியத்தடைகளை தெய்வபலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம். புதிய உத்தியோக சம்பந்தமாக முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல் வகையில் இழுபறி நிலையும், பழைய கடன் காட்சிகளால் வீண்நெருக்கடிகளும், வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் சகஜநிலையை அபிவிருத்தி செய்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவினங்களும், நெருங்கிய உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவித்தொகைகள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு தொழில் முன்னேற்றமும், ஸ்திர செத்து சேர்க்கைகளும் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்பு உள்ளவர்களுக்கு மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகள் காணப்படுவதால் சகல காரியங்களிலும் நிதானம் தேவை.
பிப்ரவரி
அதிருஷ்ட நாட்கள் : 2, 3, 6, 7, 12, 13, 14, 15, 22, 23, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 16, 17, 18, 28.
ராசிநாதன் செவ்வாய் மகர ராசியில் சூரியன், குரு, ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்கின்றனர். வண்டி வாகன சேர்க்கை அமையும். பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கை ஏற்படும். ஆனாலும் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உங்களை வீண்பழிச்சொல்லில் இருந்து காப்பாற்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகளால் இடையூறுகளும், வேண்டிய இடமாற்றங்கள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. கூட்டு தொழில்களில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளுக்குள் ஒற்றுமையான சூழ்நிலையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வபக்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் சகல முயற்சிகளிலும் மேன்மை உண்டாகும். பொருளாதார வகையில் முன்னேற்றமும், தேவைக்கேற்ற பணவரவும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், முக்கியமான பொறுப்புக்களை ஏற்கும்படியான பாக்கியமும் அமையும்.
மார்ச்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 4, 8, 13, 14, 15, 23, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 16, 17, 18.
ராசிநாதன் செவ்வாயின் நிலையில் மாற்றமில்லை. நண்பர்களுடன் சுமூக உறவை வளர்த்துக் கொள்வது அவசியம். முக்கியமாக மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வீண்விவாதங்களை தவிர்ப்பதும், சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையான சூழ்நிலையை அபிவிருத்தி செய்து கொள்வதும் அவசியம். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் காரியத்தடைகளும், எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதமும், புதிய தொழில்கள் அமைவதில் சிக்கல்களும் காணப்படுவதால் சகல காரியங்களிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் சகஜநிலையை வளர்த்துக் கொள்வதும், தொழிலாளர்களுடன் ஒற்றுமையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். குடும்பத்தில் மௌனம் கலக நாஸ்தி என்ற கொள்கையை கடைபிடிப்பது உத்தமம். பெண்களுக்கு சகல காரியங்களிலும் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு போட்டி-பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புக்களால் வீண்சங்கடங்கள் காணப்படுவதால் சகல முயற்சிகளிலும் திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.
ஏப்ரல்
அதிருஷ்ட நாட்கள் : 3, 4, 5, 9, 17, 18, 19, 23, 24, 25.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 12, 13, 14, 28.
ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றார். வக்ர சனியின் பார்வை அவருக்கு இருப்பதால் வாகனங்களில் செல்வோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக செயல்படுவதும், தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலம் சகல முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபார வகையில் மறைமுக-நேர்முக எதிர்ப்புகளால் சங்கடங்களும், எதிர்பார்க்கும் உதவித் தொகைகள் வந்து சேருவதில் காலதாமதமும், புதிய தொழில்கள் அமைவதில் தடங்கல்களும் காணப்படுவதால் சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை. குடும்பத்தில் தாமதம் அடைந்துவந்த குலதெய்வ பூஜைகளை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும். கலைஞர்களுக்கு தொழில் மூலம் முன்னேற்றமும், தேவைக்கேற்ற பணவரவும் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு சகல முயற்சிகளிலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.
மே
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 4, 5, 14, 15, 19, 20, 21, 23, 27.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 8, 9, 10, 30.
ராசிநாதன் செவ்வாய் விரயஸ்தானத்தில் குடும்பாதிபதி சுக்கிரனுடன் சஞ்சாரம் செய்கின்றார். மேற்கொள்ளும் முயற்சிகளில் தேக்க நிலை உண்டாகும். ஆனாலும் உங்களுடைய தெய்வ பலத்தால் உடனடியாக சரியாகி விடும். கும்ப ராசிக்கு மாறி உள்ள குரு பகவானால் பலவித லாபங்கள் உங்களை வந்தடையும். உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்து வரும் எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களும், சகஊழியர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகளும் திட்டமிட்டபடி வந்து சேரும். சுயதொழில், வியாபாரத்தில் தொழில் மேன்மை, தேவைக்கேற்ற பணவரவு உண்டாகும். பழைய கடன் காட்சிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தாமதம் அடைந்து வந்த புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமையும், ஓரளவு லாபமும் ஏற்படும். குடும்பத்தில் திட்டமிட்டு செயல்படுவதும், தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலம் சங்கடங்களை சிரமங்களை குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்களுக்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், வெகுஜன செல்வாக்கும், மேலிடத்தின் ஆதரவும் அனுபவ பூர்வமாக அமையும்.
ஜுன்
அதிருஷ்ட நாட்கள் : 11, 13, 14, 15, 20, 22, 23, 28, 29, 30.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 5, 6, 7.
ராசியாதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் கூடி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். தாமதம் அடைந்து வந்த இந்த ராசி ஆண்-பெண்களுக்கு விவாஹப்ராப்தமும், குடும்ப வாழ்க்கையும் ஏற்படும். பணம் பல வழிகளில் வந்து சேரும். சகல முயற்சிகளிலும் முன்னேற்றமும், பெரிய மனிதர்களின் உதவியும் அனுபவ பூர்வமாக வந்தடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள்- சகஊழியர்களுக்குள் அனுகூலமான சூழ்நிலையும், புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் எதிர்பாராத வகையில் அனுகூலத் தகவல்களும் வந்து சேரும். வெளியூர்-வெளிநாட்டு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். சுயதொழில், வியாபாரத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றமும், கொடுக்கல்- வாங்கல் வகையில் சுமூகநிலையும், புதிய நூதனமான தொழில் துறைகளில் ஈடுபடும் வாய்ப்பும், மறைமுக எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கில்லை. கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் உங்கள் வாக்குக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். நெருங்கிய உறவினர்கள்- நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். தாமதம் அடைந்து வந்த சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும். கலைர்களுக்கு தொழில் மேன்மை, ஸ்திரசொத்து சேர்க்கை, புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு சகல காரியத்திலும் முன்னேற்றம் உண்டாகும்.
ஜுலை
அதிருஷ்ட நாட்கள் : 8, 9, 10, 14, 15, 19, 21, 23, 24, 29, 31.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 2, 3, 4.
ராசிநாதன் செவ்வாய் மேஷத்திலும், பின்பு ரிஷபத்திலும் சஞ்சாரம் செய்கின்றார். எதிர்பாராத இடங்களில் இருந்து அனுகூலத் தகவல்கள் வந்து சேரும். சகல காரியங்களில் வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமுடன் ஈடுபடும்படியான சூழ்நிலையும், சகஊழியர்களின் ஆதரவும் திட்டமிட்டபடி வந்து சேரும். படித்துக்கொண்டே உத்தியோகத்திற்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு வேலைக்கான இண்டர்வியூ கார்டு வந்து சேரும். சுயதொழில், வியாபாரத்தில் மறைமுக-நேர்முக எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கில்லை. தாமதம் அடைந்து வந்த புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். கூட்டுத் தொழில்களில் மேன்மையும், ஓரளவு லாபமும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியும்-இனிமையுமான சூழ்நிலை அமையும். உற்றார் உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் திட்டமிட்டபடி வந்து சேரும். பெண்களுக்கு பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கையும், முயற்சிகளில் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு தொழில்களில் உற்சாகமாக ஈடுபடக்கூடிய சூழ்நிலையும், ஸ்திரசொத்து சேர்க்கைகளும் அமையும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், பெரியவர்களின் ஆசியும், மேலிடத்தின் ஆதரவும் அனுபவபூர்வமாக வந்து சேரும்.
ஆகஸ்ட்
அதிருஷ்ட நாட்கள் : 4, 5, 6, 8, 9, 11, 13, 17, 24, 24.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 1, 2, 29, 30.
ராசியாதிபதி செவ்வாய் தனஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். தேவைக்கேற்ற பணவரவும், பொருளாதாரத்தில் மேன்மைகளும் ஏற்படும். குருபகவான் வக்ரகதியில் மகரத்திற்கு செல்வதால் பிள்ளைகளால் சிறு தொல்லைகள் ஏற்படும். உத்தியோகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பதும், மேலதிகாரிகள்-சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் அலுவலகத்தில் சகஜநிலை ஏற்படும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் நிதானம் தேவை. கூட்டு தொழில்களில் கூட்டாளிகளுக்குள் சகஜநிலையையும், தொழிலாளர்கள் வகையில் சுமூகமான சூழ்நிலையும் வளர்த்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், குதூகலமான சூழ்நிலையும், தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் யாவும் நிறைவேறும். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் அனுகூல திருப்பங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு தொழில்களில் தாமதம்-தடைகள், போட்டி-பொறாமைகள் காணப்படுவதால் அனைத்து முயற்சிகளிலும் நிதானம் தேவை. அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு முயற்சிகளில் பலிதமும், தாமதமும் அடைந்து வந்த புதிய பதவிகள், பொறுப்புக்களை அடையும் பாக்கியமும் உண்டாகும்.
செப்டம்பர்
அதிருஷ்ட நாட்கள் : 2, 11, 14, 15, 19, 20, 25, 30.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 8, 9.
ராசிநாதன் செவ்வாய் தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், மாதத்தின் பிற்பகுதியில் சனி பகவான் கன்னியா ராசிக்கு மாறுவதாலும், மனதில் தெம்பும், தைரியமும் கூடும். மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளை பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகமாக ஈடுபட முடியாத சூழ்நிலையும், எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் வகையில் சங்கடங்களும், பழைய கடன்களால் நெருக்கடியான சூழ்நிலையும் காணப்படுவதால் எல்லா காரியங்களிலும் பொறுமையுடன் செயல்படுவதும், தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதும் அவசியம். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் சுமூகமான சூழ்நிலை நீடிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகரிக்கும். தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் நிறைவேறும். பெண்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். கலைஞர்களுக்கு தொழில் மேன்மை, புதிய வாய்ப்புகளால் ஸ்திர சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி அமையும் என்பது நிச்சயம்.
அக்டோபர்
அதிருஷ்ட நாட்கள் : 3, 4, 5, 9, 12, 13, 18, 20, 25, 28.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 16, 17, 29.
உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் மாத தொடக்கத்திலும், அடுத்த சில நாட்களில் கடகத்திலும் மாறி சஞ்சாரம் செய்கின்றனர். அங்கு நீச்சம் பெறும் செவ்வாயை மகரத்தில் நீச்சம் பெற்ற குருபகவான் பார்ப்பது ராஜயோகம். வண்டி வாகனச் சேர்க்கைகள் உண்டு. உறவினர்கள் வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் வந்து சேரும். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண்விவாதங்களை தவிர்ப்பதும், சகஊழியர்கள் வகையில் சுமூகமான சூழ்நிலையை அபிவிருத்தி செய்து கொள்வது அவசியம். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் மறைமுக-நேர்முக எதிர்ப்புகளால் சங்கடங்களும், வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதமும் ஏற்படும். புதிய தொழில்கள் அமைவதில் இழுபறி நிலை உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை நீடிக்கும். தேவைக்கேற்ற பணவரவு ஏற்படும். குடும்பத்தில் உங்கள் வாக்குக்கு மதிப்பு கிடைக்கும். தாமதம் அடைந்து வந்த குலதெய்வ பூஜைகள் நிறைவேறும். உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் ஒத்தாசைகள் வந்து சேரும். கலைஞர்களுக்கு தொழில்களில் முன்னேற்றமும், ஸ்திர சொத்து சேர்க்கையும், புதிய வாய்ப்புக்களும் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் புகழும், செல்வாக்கும் அபிவிருத்தி அடையும்.
நவம்பர்
அதிருஷ்ட நாட்கள் : 7, 9, 10, 13, 19, 23, 25.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 16, 17, 18, 29.
ராசிநாதன் செவ்வாய் நான்காமிடத்தில் சஞ்சாரம் செய்வதால் அதிர்ஷ்டமான திருப்புமுனைகள் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடும். தெளிவான மனநிலையும், தெய்வ பலமும், தேவைக்கேற்ற பணவரவும் வந்து சேரும். உத்தியோகத்தில் முயற்சிகளில் முட்டுக்கட்டைகளும், சகஊழியர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதால் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் சகல முயற்சிகளிலும் மேன்மை ஏற்படும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். சுயதொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில்களில் முன்னேற்றமும், எதிர்பார்க்கும் தொகைகள் கைக்கு வந்து சேரும் பாக்கியமும் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை நீடிக்கும். ஸ்திர சொத்து சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் தாமதம் அடைந்து வந்த சுபகாரிய சுபச்செலவுகள் நிறைவேறி மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். இதன் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமும், பொன்-பொருள் சேர்க்கையும் ஏற்படும். கலைத் தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தொழில் மேன்மை அடைவதுடன் வரவேண்டிய வாய்ப்புகள் திட்டமிட்டபடி வந்து சேரும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு முயற்சிகளில் பலிதமும், வெகுஜன செல்வாக்கும் உயர்ந்து காணப்படும்.
டிசம்பர்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 4, 5, 8, 9, 10, 19, 20. 23, 31.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 14, 15, 16.
ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பூமி, மனைகளில் ஆதாயங்களும், தாயாருடைய வழிகளில் வேண்டிய உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுநாள் வரையில் இருந்து வந்த தடைகள் யாவும் படிப்படியாக விலகி பணிபுரியும் இடத்தில் சுமூகமான உறவுகள் நிலவும். மேலதிகாரிகள், சகஊழியர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகளும், ஒத்தாசைகளும் அனுபவபூர்வமாக வந்து சேரும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுயதொழில், வியாபாரத்தில் செய்தொழில் மேன்மையும், பழைய கடன்காட்சிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தாமதம் அடைந்து வந்த தொழில்கள் யாவும் இக்காலங்களில் வந்து சேரும். கூட்டுத் தொழில்களில் உற்சாகமுடன் ஈடுபடும்படியான சூழ்நிலை அமைவதுடன் தேவைக்கேற்ற பணவரவும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். பெண்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். கலைஞர்களுக்கு தொழில் மேன்மை, வண்டி வாகன சேர்க்கை, புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்பு உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலப்பகுதியாகும்.







