2009 - Rishabam Tamil Rasipalan
கற்பனை வளமும் அற்புதத் திறனும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!
செய்கின்ற தொழிலிலும், வியாபாரத்திலும், உத்தியோகத்திலும், தனது திறமைக்கு குறைந்த வேலை, செய்து வந்தாலும் சரி, எங்கும், எப்போதும், எந்தவிதமான சூழ்நிலையிலும் அனுசரித்துக்கொண்டு போய்விடும் குணத்தை இயல்பாக அமையப்பெற்றவர் நீங்கள். சிலருக்கு தாயின் அரவணைப்பு குறைவாகவே கிடைக்கும். பொதுவாகவே தகப்பனாரின் பாசம் அதிகம் இருக்கும் என்றாலும் தகப்பனார் வாழ்க்கையில் மிக, மிக கஷ்ட நிலையில் இருப்பவராகவே பலருக்கு அமையும் நிலை உள்ளது. எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை நம்பிக்கையை குறையவிடாமல் எதிர்நீச்சல் போட்டு, 38, 40 வயதுக்கு மேல் ஓர் நல்ல நிலையை அடையும் யோகம் பெற்றவராக நீங்கள் மூளையை உபயோகித்துச் செய்யும் படிப்பு சம்பந்தமான, எழுத்து சம்பந்தமான, சினிமா கலை சம்மந்தமான துறைகளில் செய்து பிரபலம் அடைந்து கோடீஸ்வரராக திகழ முயற்சிகள் செய்வீர்கள். அதாவது ''மூலதனம்'' இல்லாமல் உங்களின் ''மூளை''யை கொண்டு ''தனம்'' சம்பாதித்து வரும் கெட்டிக்காரர் நீங்கள்தான். 2009-ஆம் ஆண்டு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியுடன் இருக்கும் உங்களுக்கு 2009-புத்தாண்டு பலனை பார்க்கும் பொழுதும், உங்களின் ''ரிஷப'' ராசிக்கு முழுமையான யோகக்காரனான ''சனீஸ்வரன்'' சுக ஸ்தானமான 4-ல் இருந்தும் கெட்டவன் ஆன ''குருபகவான்'' பாக்கிய ஸ்தானமான 9-ல் இருந்தும், ''ராகு'' பாக்கிய ஸ்தானமான 11-ல் இருப்பதும், ''கேது'' தைரிய ஸ்தானமான 3-ல் இருந்தும், சஞ்சாரம் செய்து வருவதாலும், மேலும் மிக முக்கியமாக நீண்ட கால கிரகங்களான சனி, குரு, ராகு, கேது, குறுகிய கால கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன், போன்றவைகளின் ஆதிபத்தியம் ஆதிக்கம், பார்வை, யோகங்கள் போன்றவைகளையும் கணித்து பார்க்கும் போது இனிமேல், செய்தொழிலில் வேகம் உண்டாகும். சிலருக்கு சாதிக்க வேண்டிய பொற்கால யோகமும் உண்டாகி பிரபலமடைவர். சகலவிதமான நன்மைகளும் வந்து சேரும்.
நட்சத்திரங்கள் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2.
பெயர் எழுத்துக்கள் : இ, உ, எ, ஓ, வி, வு, வே, வோ.
சிறப்பான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர்.
ஜனவரி
அதிருஷ்ட நாட்கள் : 3, 4, 5, 9, 11, 12, 14, 1, 19, 27, 29, 30 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 22, 23 .
ராசிநாதன் சுக்கிரன் பதினோராமிடத்தில் அமர்ந்தும், குரு பகவான் ஐந்தாமிடத்தில் அமர்ந்தும் பார்வையிடுவதால் குடும்பத்தில் தாமதம்-தடை, நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதம், தொழில்களில் முன்னேற்றத் தடை, ஓரளவிற்கு பணவரவு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள்-சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை அபிவிருத்தி செய்து கொள்வதும், அலுவலகத்தில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதமும், புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். சுயதொழில், வியாபாரத்தில் மறைமுக-நேர்முக எதிர்ப்புகளால் வீண்தொல்லைகளும், பழைய கடன்காட்சிகளால் சங்கடங்களும், கூட்டு தொழில்களில் கூட்டாளிகளுடன் சுமூகமான சூழ்நிலையை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலம் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும். கலைஞர்களுக்கு மாத இறுதியில் சொத்து சேர்க்கையும், தொழில்களில் முனனேற்றமும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்பு உள்ளவர்களுக்கு மௌனம் கலக நாஸ்தி என்ற கொள்கையை கடைபிடிப்பதன் மூலம் சங்கடங்கள் விலகி சகல முயற்சிகளிலும் முன்னேற்றம் உண்டாகும்.
பிப்ரவரி
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 7, 8, 9, 14, 1, 21, 22, 26 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 19, 20, 25 .
பதினோராமிடந்தனிலே பலகோளும் நல்லான் என்ற பழமொழிப்படி ராசிநாதன் சுக்கிரன் பதினோராமிடத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிரிகள்-எதிர்ப்புகள் விலகும். சொத்து சேர்க்கைகளும், புதிய தொழில்களில் ஈடுபடும் பாக்கியமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டும்படியான சூழ்நிலையும், சகஊழியர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகளும் வந்து சேரும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இண்டர்வியூ கார்டு வந்து சேரும். சுயதொழில், வியாபாரத்தில் காணப்பட்ட முட்டுக்கட்டைகள் விலகி எதிர்பாராத முன்னேற்றமும், வங்கிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும்படியான சூழ்நிலையும், புதிய தொழில் துறைகளில் ஈடுபடும்படியான வாய்ப்பும் ஒரு சிலருக்கு அமையும். கூட்டு தொழில்களில் கூட்டாளிகளுடன் சகஜநிலை ஏற்படும். வீண்விவாதங்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதியும், நெருங்கிய உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வண்டி வாகன சேர்க்கை அமையும். அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்கள் நிதானமான சூழ்நிலையை வளர்த்துக் கொள்வதன் மூலம் மேலிடத்தின் பாராட்டும், எதிர்பார்க்கும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
மார்ச்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 4, 6, 7, 16, 22, 23, 27, 29, 31 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 18, 19 .
ராசிநாதன் சுக்கிரன் பதினோராமிடத்தில் உச்ச வக்ரம் பெற்று சூரியனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் சகல முயற்சிகளிலும் திட்டமிட்டு செயல்படுவதும், வண்டி வாகனங்கள் மூலம் விபத்துகள் காணப்படுவதால் தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதும் உத்தமம். அலுவலகத்தில் சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதும், அவப்பெயர் நேரும்படியான சூழ்நிலைகள் காணப்படுவதால் சகல முயற்சிகளிலும் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். சுயதொழில், வியாபாரத்தில் பழைய கடன்களால் வீண்நெருக்கடிகளும், புதிய தொழில்கள் அமைவதில் சங்கடங்களும் காணப்படுவதால் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் உங்களுடைய வாக்குக்கு மதிப்பற்ற சூழ்நிலையும், சகல முயற்சிகளிலும் வீண்அலைச்சல்-திரிச்சல்களும், பொருள் விரயமும் உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய் நொடிகள் காணப்படுவதால் உடல் ஆரோக்ய வகையில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு தொழில் துறைகளில் முன்னேற்றத் தடைகளும், புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலையும் காணப்படுவதால் சிந்தித்து செயல்படுவது அவசியம். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு சகல காரியங்களிலும் நிதானம் தேவை. புதிய வாய்ப்புகள் வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படும்.
ஏப்ரல்
அதிருஷ்ட நாட்கள் : 9, 10, 11, 12, 13, 17, 26, 30 .
கவமாக இருக்க வேண்டிய நாட்கள் : 14, 15, 16 .
ராசிநாதன் சுக்கிரன் மாத இறுதியில் வக்ர நிவர்த்தி அடைவதால் இதுவரை இருந்து வந்த தாமதம்-தடைகள், எதிரிகள்-எதிர்ப்புகள் யாவும் விலகி சகல காரியங்களில் வெற்றியும், புதிய வாய்ப்புகளும், தேவைக்கேற்ற பணவரவும் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள்-சகஊழியர்கள் வகையில் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதும், புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் அவசியம். சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் வகையில் இழுபறி நிலையும், வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதமும், பழைய கடன்களால் நெருக்கடிகளும் உண்டாகும். கூட்டு தொழில்களில் கூட்டாளிகளுடன் சகஜநிலையை அபிவிருத்தி செய்து கொள்வது உத்தமம். கலைஞர்களுக்கு தொழில்துறைகளில் ஓரளவு வெற்றி வாய்ப்பும், புதிய தொழில்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவதும் அவசியம். அரசியல், பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் சகல காரியங்களிலும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றியும், மேலிடத்தின் பாராட்டும், வரவேண்டிய புதிய வாய்ப்புகளும் வந்து சேரும்.
மே
அதிருஷ்ட எண்கள்: 5, 6, 9, 10, 11, 15, 19, 26, 27, 28, 29 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 12, 13, 14 .
ராசிநாதன் சுக்கிரன் பதினோராமிடத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதால் திட்டமிட்ட சகல காரியங்களிலும் ஈடுபடும்படியான சூழ்நிலையும், புதிய முயற்சிகளில் வெற்றியும், உடல் ஆரோக்கிய வகையில் முன்னேற்றமும், தெய்வ பலமும் ஏற்படும். உத்தியோக வகையில் மேலதிகாரிகள்-சகஊழியர்கள் இடையே வீண்விவாதத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. சுயதொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும்படியான சூழ்நிலையும், பழைய கடன்களால் இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். மறைமுக-நேர்முக எதிரிகள்-எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் காணப்பட்டபோதிலும் உடனுக்குடன் நிவாரணம் ஏற்படும்படியான சூழ்நிலையும், தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றமும் உண்டாகும். பெண்களுக்கு ஆடை-ஆபரண சேர்க்கை, திட்டமிட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும். கலைஞர்களுக்கு தொழில் துறைகளில் முன்னேற்றமும், ஸ்திர சொத்து சேர்க்கையும், வண்டி வாகன சேர்க்கையும் ஏற்படும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புடையவர்களுக்கு மறைமுக எதிரிகள்-எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படமுடியாத தெய்வபலம் அமையும்.
ஜூன்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 5, 8, 13, 14, 18, 19, 23, 24, 30 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 9, 10 .
ராசிநாதன் சுக்கிரன் பனிரெண்டாமிடத்தில் செவ்வாய் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் போட்டி-பொறாமைகள் விலகி புதிய புதிய வாய்ப்புகளும், தேவைக்கேற்ற பணவரவும், தெய்வ பலமும் உண்டாகும். உத்தியோக வகையில் எதிர்பாராத அனுகூல திருப்பங்கள், தாமதம் அடைந்த கோரிக்கைகள் நிறைவேறும். மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளால் எந்தவிதமான சங்கடங்களும், இடையூறுகளும் ஏற்படாத வகையில் தெய்வபலம் உண்டாகும். உத்தியோக சம்பந்தமான பிரச்சினைகள், கோர்ட் வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் கை கொடுக்கும். வரவேண்டிய தொகை வந்து சேரும். பழைய கடன்கள் யாவும் விலகும். அரசுத்துறை, பேங்க் முதலியவற்றில் எதிர்பார்க்கும் உதவித்தொகைகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற சொத்து சேர்க்கைகள் உண்டாகும். பெண்களுக்கு உற்சாகமான மனநிலை, உடல் ஆரோக்கிய மேன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் முன்னேற்றமும், வண்டி வாகன சேர்க்கையும் வந்து சேரும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு தாமதம்-தடைகள் விலகி சகல காரியங்களில் வெற்றியும், மேலிடத்தின் பாராட்டும், புதிய வாய்ப்புகளால் மனதிற்கு இனிய சம்பவங்களும் நிறைவேறும்.
ஜூலை
அதிருஷ்ட நாட்கள் : 11, 12, 17, 18, 24, 27 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 6, 7, 8 .
ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் உற்சாகமான மனநிலை, அதிர்ஷ்டமான திருப்பங்கள், வெகு காலமாக திருமணம் தடைபட்டு வந்த இந்த ராசி நேயர்களுக்கு விவாஹப்ராப்தமும், குடும்ப வாழ்க்கையும் ஏற்படும். உத்தியோகத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். மேலதிகாரிகள்-சகஊழியர்களுக்கிடையே ஒற்றுமையான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, இடமாற்றம் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுயதொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றமும், தனலாபமும் ஏற்படும். தாமதப்பட்டு வந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுயதொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றமும், தனலாபமும் ஏற்படும். தாமதப்பட்டு வந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் எதிர்பாராத உதவி, ஒத்தாசை, அனுகூல திருப்பம் உண்டாகும். வெளியூர்-வெளிநாட்டில் இருந்து எதிர்பார்க்கும் அனுகூல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுபகாரிய-சுபசெலவுகள் இதன் தொடர்பான பயணங்களில் வெற்றி உண்டாகும். கலைஞர்களுக்கு தொழில்களில் உற்சாகமாக ஈடுபடும்படியான சூழ்நிலையும், தேவைக்கேற்ற பணவரவும், ஸ்திர சொத்து சேர்க்கைகளும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், தாமதம் அடைந்து வந்த புதிய பொறுப்புகளை ஏற்கும்படியான சூழ்நிலை அமையும்.
ஆகஸ்ட்
அதிருஷ்ட நாட்கள் : 6, 7, 8, 10, 11, 12, 19, 20, 21, 25 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 1, 2, 3 .
ராசிநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் இரண்டாமிடத்திலும், மாத இறுதியில் மூன்றாமிடத்திலும் சஞ்சாரம் செய்வதால் தேவைக்கேற்ற பணவரவு, மேற்கொள்ளும் காரியங்களில், எதிர்பாராத அனுகூல திருப்பங்கள் ஏற்படும். உத்தியோக வகையில் அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டும்படியான சூழ்நிலையும், சகஊழியர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகளும் வந்து சேரும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுயதொழில், வியாபாரத்தில் பழைய கடன்களால் இருந்து வந்த நெருக்கடிகள் யாவும் விலகி தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்களில் காணப்பட்ட விரோதங்கள் மறையும். கூட்டு தொழில்களில் கூட்டாளிகள்-தொழிலாளர்களுக்கிடையே ஒற்றுமையும், தொழில் மேன்மையும் ஏற்படும். குடும்பத்தில் சங்கடங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். சகோதர-சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள்-நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். பெண்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். கலைஞர்களுக்கு தொழில் முன்னேற்றம் அடையும். தேவைக்கேற்ற பணவரவும், ஸ்திர சொத்து சேர்க்கைகளும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்புள்ளவர்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றமும், மேலிடத்தின் அனுசரணையும் எதிர்பார்த்தபடி அமையும்.
செப்டம்பர்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 3, 4, 9, 10, 14, 15, 19, 20, 23 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 25, 26 .
ராசிநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் மூன்றாமிடத்திலும், மாத இறுதியில் நான்காமிடத்திலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை காணப்படுவதால் தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையும், மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்பட முடியாத தெய்வபலமும், புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சுயதொழில், வியாபார வகையில் எல்லா வகையிலும் முன்னேற்றமும், பொருளாதார மேன்மையும், வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும் பாக்கியமும், புதிய நூதனமான தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பும் அமையும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் வீண்விவாதங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் சங்கடங்கள் குறையும். நெருங்கிய உறவினர்கள்-நண்பர்கள் வகையில் ஒற்றுமையான சூழ்நிலையை கடைபிடிக்கவும். பெண்களுக்கு சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு தொழில் முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளால் பயணங்களும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறைமுக-நேர்முக எதிரிகள், எதிர்ப்புகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுவதற்கு இல்லை. மக்கள் மத்தியில் வெகுஜன செல்வாக்கு ஏற்படும்.
அக்டோபர்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 3, 7, 8, 12, 14, 16, 19, 20, 25, 26 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 22, 23 .
ராசிநாதன் 10-ஆம் தேதி ஐந்தாமிடத்தில் நீச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத பணவரவு, முயற்சிகளில் முன்னேற்றம், திட்டமிட்ட காரியங்களில் எதிர்பாராத அனுகூல திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமான சூழ்நிலையும், வேண்டிய இடமாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். சுயதொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் கை கொடுக்கும். புதிய தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பும், வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும் பாக்கியமும் ஏற்படும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கையும், தாமதம் அடைந்து வந்த சுபகாரிய-சுபபயணங்களும் நிறைவேறும். இதன் தொடர்பான பயணங்களில் வெற்றி உண்டாகும். பெண்களுக்கு மனதிற்கு இனிய சம்பவங்கள் நிறைவேறும். கலைஞர்களுக்கு தொழில் முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளால் தேவைக்கேற்ற பணவரவும், ஸ்திர சொத்து சேர்க்கையும் உண்டாகும். கலை சம்பந்தமான தொழில்களில் உள்ளவர்களுக்கு தொழில் முன்னேற்றம் அடையும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் மூலம் அனுகூல திருப்பங்களும், மேலிடத்தின் அனுசரணையும் ஏற்படும்.
நவம்பர்
அதிருஷ்ட நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 13, 14, 19, 24, 26 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் : 20, 21, 22 .
ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதால் முயற்சிகளில் முன்னேற்றமும், எதிர்பாராத சுபவிரயங்களும் ஏற்படும். பூமி, வாகனங்களால் விபத்துகள் காணப்படுவதால் எச்சரிக்கையுடன் செயல்படுவதும், தெய்வபலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதும் அவசியம். அலுவலகத்தில் ஒற்றுமையும், திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், புதிய உத்தியோகம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அனுகூலத் தகவல்கள் வந்து சேரும். சுயதொழில், வியாபார வகையில் முன்னேற்றமும், பொருளாதார மேன்மையும், புதிய தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பும், வெளியில் இருந்து எதிர்பார்க்கும் உதவிதொகைகள் வந்து சேரும் பாக்கியமும் காணப்படுகிறது. குடும்பத்தில் ஒற்றுமையும், தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் நிறைவேறும். பாக்கியமும் காணப்படுகிறது. பெண்களுக்கு பொன்-பொருள், ஆடை-ஆபரண சேர்க்கையும், மனதிற்கு இனிய சம்பவங்களும் நிறைவேறும். கலைஞர்களுக்கு தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில்களில் இருந்து வந்த விரோதங்கள் மறையும். கலைஞர்களுக்கு தொழில்களில் உற்சாகமாக ஈடுபடும்படியான சூழ்நிலையும், புதிய வாய்ப்புகளால் தேவைக்கேற்ற பணவரவும், சொத்து சேர்க்கைகளும் உண்டாகும். அரசியல், பொதுச்சேவையில் தொடர்பு உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியான சூழ்நிலையும், மேலிடத்தின் ஆதரவு உண்டாகும்.
டிசம்பர்
அதிருஷ்ட நாட்கள் : 6, 7, 8, 9, 14, 15, 18, 20, 22 .
கவனமாக இருக்க வேண்டிய நாட்டிகள் : 16, 17 .
ராசிநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் ஏழாமிடத்தில் சஞ்சாரம் செய்தபோதிலும் மாத இறுதியில் எட்டாமிடத்தில் சஞ்சாரம் செய்வதால் மறைமுக-நேர்முக எதிர்ப்புகளால் விரோதங்கள் காணப்படுவதால் சகல முயற்சிகளிலும் பொறுமையுடன் செயல்படுவதும், தெய்வ பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரிகள் வகையில் வீண் விவாதங்களை குறைத்துக் கொள்வதும், சகஊழியர்களுக்குள் ஒற்றுமையை அபிவிருத்தி செய்து கொள்வதும் உத்தமம். புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. கூட்டு தொழில்களில் கூட்டாளிகள்-தொழிலாளர்களிடையே ஒற்றுமையை அபிவிருத்தி செய்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் புதிய புதிய செலவினங்களும், மறைமுக எதிர்ப்புகளும், நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் வகையில் சகஜநிலை மாறி சங்கடமான சூழ்நிலைகளும் அபிவிருத்தி அடையும். கலைஞர்கள் தொழில்களில் சிந்தித்து செயல்படுவது அவசியம். பொதுச்சேவையில் உள்ளவர்களுக்கு அலைச்சல்-திரிச்சல்களும், இனம்புரியாத குழப்பங்களும் ஏற்படும்.







