முதல் பக்கம் » ராசிபலன் » வார ராசிபலன்
வார ராசிபலன் -

Tamil Weekly Horoscope

வார ராசிபலன் 8/15/2017 முதல் 8/21/2017 வரை

 
Mesham | Aries - 2017 Tamil Horoscope
21/Mar - 19/Apr
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
இரண்டாம் வீட்டுக்கு சனி பகவானின் பார்வை கிடைத்திருப்பதால் குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் எதுவும் வேண்டாம். ஏனெனில், சுக்கிரன் பலம் பெற்றுத் திகழ்கிறார். உச்சம் பெற்றிருக்கிறார். வார்த்தைகளால் வசீகரிக்கச் செய்வீர்கள். எட்டில் சனி என்பதால் வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள். பதினொன்றில் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.Go Top
 
Rishabam | Taurus - 2017 Tamil Horoscope
20/Apr - 20/May
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
இரண்டாம் வீட்டுக்குச் சந்திரன் இருப்பதால் பேச்சில் மென்மையும் மேன்மையும் அதிகரிக்கும். தாய்வழி உறவினராலும் தாயாராலும் உயர்வுகளும் லாபமும் கிடைக்கும். நாலில் குரு என்பதால் தாயாருக்கும் உங்களுக்கும் நடுவில் நல்லுறவும் நல்லிணக்கமும் இருக்கும். முன்பிருந்த சண்டை சச்சரவுகள் அல்லது மனஸ்தாபங்கள் குறைந்து நல்லுறவு ஏற்பட்டு நிம்மதி அளிக்கும். குருவுடன் உள்ள ராகு வெளிநாட்டு விவகாரங்களில் நன்மை அளிப்பார். வெளிநாட்டுக் கல்வி அமையும்.Go Top
 
Mithunam | Gemini - 2017 Tamil Horoscope
21/May - 21/Jun
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
பதினொன்றாம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலைச் செய்ய விரும்புபவர்கள் சாதகமான தசா புக்திகள் இருந்தால் தைரியமாக இறங்கலாம். ஒன்பதாம் வீட்டுக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் தந்தைக்கு நன்மைகள் அதிகரிக்கும். உங்களுக்குத் தந்தையின் ஆதரவும் நெருக்கமும் கூடும். அதுவே அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் வீடு என்பதால் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரித்து அதிக வருமானமும் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஐந்தாம் வீட்டுக்குரிய சூரியன் உங்கள் குழந்தைகளுக்கு அரசாங்க சம்பந்தமான நன்மைகளை வாங்கித் தருவார்.Go Top
 
Kadagam | Cancer - 2017 Tamil Horoscope
22/Jun - 22/Jul
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
உங்கள் பத்தாம் வீட்டுக்கு குரு பார்வை ஏற்பட்டிருப்பதால் புதிய வேலை மாற விரும்பினால் அதற்கு இதுவே உகந்த நேரம். பத்தில் புதனுடன் சூரியனும் இருப்பதால் அரசாங்க உத்யோகம் அல்லது வங்கி உத்யோகம் கிடைக்கும். பாஸ்போர்ட், விசா போன்றவற்றிற்காக காத்திருந்தவர்களுக்கு விரும்பியபடியே கிடைக்கும். பத்தாம் வீட்டிலுள்ள உள்ள சூரியனும் புதனும் சுக்கிரனும் உங்களுக்கு அருமையான வேலையை வாங்கித் தந்து வாழ்க்கை வசதியும் அளிப்பார்கள். ஐந்தில் உள்ள செவ்வாய், குழந்தைகளின் வாழ்வில் திடீர் நன்மைகளை அளிப்பார்.Go Top
 
Simmam | Leo - 2017 Tamil Horoscope
23/Jul - 22/Aug
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
இரண்டாம் வீட்டை சுக்கிரன் பார்ப்பதால் பேச்சில் கவர்ச்சி கூடும். அதனால் லாபமும் கூடும். ஒன்பதாம் வீட்டில் புதனும் சூரியனும் இணைந்திருப்பதால் அதிர்ஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும். நான்காம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் புதிய வாகனங்களை திடீர்த் தீர்மானத்தில் வாங்குவீர்கள். ஒன்பதாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் அரசாங்கத்தின் மூலம் பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் ஆரோக்யம் கெடும்படியான பழக்கங்கள் வேண்டாம்.Go Top
 
Kanni | Virgo - 2017 Tamil Horoscope
23/Aug - 22/Sep
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
பன்னிரெண்டில் குரு இருப்பதால் சுபமான செலவுகள் மட்டுமே ஏற்படும். நான்காம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால், இது மாணவர்களுக்கு நன்மை அளிக்கும் கால கட்டம். மூன்றாம் வீட்டில் சனி இருப்பது நல்ல அமைப்பு. சென்ற வாரங்களில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த தொழில் முன்னேற்றங்கள் வேகம் பிடிக்கும். பன்னிரெண்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டு வாய்ப்புக்கு வேளை வரவிருக்கிறது. அவசரம் வேண்டாம். ராசிநாதன் எட்டில் இருந்தாலும் குரு பார்வை பெறுவது சிறப்பு. ஆறாம் வீட்டுக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் கடன் தொல்லையிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுவீர்கள்.Go Top
 
Thulam | Libra - 2017 Tamil Horoscope
23/Sep - 22/Oct
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
பதினோராம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுவும் அந்த வீட்டைப் பார்க்கும் கேதுவும் நன்மைகளை அளிக்கத் தயாராக உள்ளனர். சனி இரண்டில் இருக்கிறார். குடும்பத் தலைவி /தலைவருக்கு ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கும். ஆனால், அதைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம். இப்போது உள்ளவை மிகவும் தற்காலிக பிரச்னைகளே. அதிலும் நல்ல நிலையில் குரு இருப்பதால் பணத்திற்கோ நிம்மதிக்கோ குடும்ப ஒற்றுமைக்கோ குறை இருக்காது. ராசிநாதன் ஆறில் உச்சம். எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உதவி செய்வார்கள். கடன் அடையும். வருமானம் கூடும்.Go Top
 
Virushigam | Scorpio - 2017 Tamil Horoscope
23/Oct - 21/Nov
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
ஆறில் புதன் உச்சமாக இருப்பதால் நண்பர்களின் புத்திசாலித்தனமான போக்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பன்னிரெண்டில் சந்திரன் வார ஆரம்பத்தில் வருவதால் வெளியூர் பயணங்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். அதற்கான செலவினங்கள் அதிகரிக்கும். எனினும் செலவுகள் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். ஆறில் மனோகாரகன் என்பதாலும் ராசிநாதன் என்பதாலும் எண்ணங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவார். கவனமாக இருங்கள்.Go Top
 
Thanusu | Sagittarius - 2017 Tamil Horoscope
22/Nov - 21/Dec
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
ராசியில் சந்திரன் வருகிறார். மனத் தெளிவு அதிகரிக்கும். குழப்பமான விஷயங்களை நீங்களாகத் தவிர்ப்பது நல்லது. அதீத யோசனைகள் மற்றும் சிந்தனைகள் ஏற்படும். இந்தச் சந்திரனுக்குக் குரு பார்வை கிடைப்பதால் மேலும், உயர்வுகள் உண்டு. ஐந்தாம் வீட்டில் உள்ள புதன் குழந்தைகளின் அறிவாற்றலையும் சமயோசிதத்தையும் அதிகரித்துக் கொடுப்பதால் அவர்கள் பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பதற்கு உதவுவார். ஆறாம் வீட்டினை சனி பார்ப்பதால் நீங்கள் கடன் மனு செய்திருந்தால் அது கிடைப்பதற்குக் காத்திருக்க வேண்டியது வரலாம். பொறுத்தாலும் கிடைத்துவிடும்.Go Top
 
Magaram | Capricorn - 2017 Tamil Horoscope
22/Dec - 19/Jan
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
பதினோராம் வீட்டில் சனி இருப்பதால் வர வேண்டிய லாபங்கள் சற்றுத் தடை தாமதங்களுடன்தான் வரும். எனினும் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் சரியாகிவிடும். பத்தாம் வீட்டிற்குச் சந்திரன் வருகிறார். அவர் எண்ணங்களையும் சிந்தனைகளையும் மனதையும் குறிப்பவரும் கட்டுப்படுத்துபவருமான மனோகாரகன். எனவே, உத்யோகம் பற்றித் தெளிவாக முடிவெடுப்பீர்கள். மனதிலே குழப்பமில்லை. அலுவலகத்தில் உங்கள் நற்பெயரை அதிகரித்துக் கொடுக்கவும் அதன் காரணமாக மேலும் மேலும் வாய்ப்பு அதிகரிக்கவும் இந்த வாய்ப்பு உதவும்.Go Top
 
Kumbam | Aquarius - 2017 Tamil Horoscope
20/Jan - 18/Feb
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு ராகு பார்வை இருக்கிறதே. எனவே, வெளியூர் வெளிநாட்டிலிருந்து நெருங்கிய உறவினர்கள் வருவார்கள். அவர்களால் நன்மைகளும் விளையும். குரு ராசிநாதனான சனியை பார்க்கிறார். ஆகவே மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும். ஏழரைச் சனி இருப்பதால் சம்பந்தமில்லாத சிறு பழிகள் ஏற்பட்டாலும் ராசிக்கான குரு பார்வை காரணமாக அனைத்தும் விலகும். சனியின் காரணமாக உழைப்பு அதிகரிக்கும். எனினும் குருவின் காரணமாக ஊதியம் உயரும்.Go Top
 
Meenam | Pisces - 2017 Tamil Horoscope
19/Feb - 20/Mar
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இரண்டாம் வீட்டுக்கு குரு பகவான் பார்வை கிடைப்பதன் காரணமாகப் பேச்சில் இனிமையும் பணிவும் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடைபெறும் அல்லது குழந்தைப் பேறு கிட்டும். ராசியில் சுக்கிரனால் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பன்னிெரண்டாம் வீட்டிலுள்ள கேதுவுக்கு குரு மற்றும் ராகுவின் பார்வை கிடைத்திருப்பதால் வெளிநாட்டுப் பயணம் உறுதியாகி மன மகிழ்ச்சியடைவீர்கள் என்பது உறுதியாகிறது. நல்ல நண்பர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வதன் மூலம் வாழ்க்கை உயரும்.Go Top
Site Meter