கப்பம்
1. "ஆனாலும் ராப்பிச்சைக்கு அநியாய திமிர்..."
"என்ன சமையல்னு கேக்கறானா...?"
"யாரோட சமையல்னு கேக்கறான்..!"
என். பர்வதவர்த்தினி
2. "கபாலிக்கு ரொம்ப நல்ல மனசு..."
"எப்படிச் சொல்றீங்க?"
"பெட்ரோல் விலை உயர்ந்திருக்கற இந்த நேரத்துல மாமூலோட சேர்த்து "பெட்ரோல் அலவன்ஸ்" தர்றானே...!"
ராம்.ஆதிநாராயணன்
3. "எங்கே... மூச்சை இழுத்து விடுங்க!"
"விளையாடதீங்க நர்ஸ்! உங்களைப் பாத்ததுல இருந்து அதைத்தானே செஞ்சிக்கிட்டு இருக்கேன்..."
இ.தங்கமணி
4. "எதிரி மன்னன் சரியான தீனிப் பண்டாரமா இருப்பான் போலிருக்கு மன்னா..."
"எப்படிச் சொல்றே....?"
"கப்பம் கட்டு... இல்லைன்னா ஒரு டஜன் ஆப்பம் கட்டி அனுப்புன்னு ஓலை அனுப்பி இருக்கானே...!"
வி.அங்கப்பன்
5. "ஞாபக மறதியால உன் கணவர் மூணு கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சாதாரணமா சொல்றே..?"
"அவர் மூணு தடவை கல்யாணம் பண்ணினதும் என்னைத்தானே!"
ப.உமாமகேஸ்வரி






