20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 28 ஜுலை 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

பீகார் இடைத்தேர்தலில் லாலுபிரசாத், நிதிஷ்குமார் ஒன்றாக பிரச்சாரம் செய்ய முடிவு

பாட்னா

பீகாரின் முன்னாள் முதல்வர்களான ஜக்கிய ஜனதாதள் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சித் தலைவர்  லாலுபிரசாத் யாதவ் ஆகிய இருவரும் 24 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். 

பீகாரில் சாப்ரா, ராஜ்நகர், (தனித்தொகுதி), மொகியுடிநகர், பங்கா, ஹாஜிர்,மொஹனியா (தனித்தொகுதி), ஜலே, பர்பட்டா, நர்கட்டியாஞ்ஜி, மற்றும் பகல்பூர், ஆகிய 10 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

 

பா.ஜ.க 9 தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Site Meter