20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 29 ஜுலை 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

திரிணாமுல் காங். எம்.பி.க்கு எதிராக விசாரணை: கோர்ட்டு உத்தரவு

கொல்கத்தா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபாஸ் பாலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கொல்கத்தா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே கலந்துரையாடிய அக்கட்சி எம்.பி தபாஸ் பால் பேசுகையில்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் எங்கள் தொண்டர்களை கொலை செய்தால் அவர்களை பழிக்குபழி வாங்குவோம். அவர்களை நான் வெறுமனே விடப்போவது இல்லை. தேவைப்பட்டால் சிபிஎம் கட்சி பெண்களை கற்பழிக்குமாறு எனது கட்சியினரை நான் கேட்டுக்கொள்வேன். என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெண்களை கற்பழிக்குமாறு எங்கள் கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொள்வேன் என்று தபாஸ்பால் பேசியதால் பெருத்த சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறியது. 

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு  எம்.பி. தபாஸ் பாலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து  சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.


Site Meter