20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 29 ஜுலை 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத தலைவன் கைது

புதுடெல்லி

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான அப்துல் சுபானை(வயது 42) டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
 
டெல்லியின் சராய் காலேகான் பஸ்நிலையத்தில் வைத்து தீவிரவாதி அப்துல் சுபானை போலீசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது அப்துல் சுபான், ராஜஸ்தான், பீகார், அரியானா மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்து தொடர்பாக பேசியது மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவனுடன் தொடர்பு உடையவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே அப்துல் சுபான் பயங்கர ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெடிப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை கடத்தி வந்தபோது குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் சி.பி.ஐ. போலீசாரிடம் பிடிபட்டான். இந்த வழக்கில் அவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவன் நன்நடத்தை காராணமாக 8 வருடங்களிலே சபர்மதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். கடந்த 2010ம் ஆண்டு அவன் விடுதலை செய்யப்பட்டான். அப்துல் சுபான், தீவிரவாத இயக்கங்களுடன் தனது தொடர்பினை பலப்படுத்தி லஷ்கர்-இ-தொய்பா வழிகாட்டலின்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இளைஞர்களை மூளைச் சலவை செய்யது வந்துள்ளான். 

2013ம் ஆண்டில் ராஜஸ்தான் மற்றும் அரியானாவை சேர்ந்த சென்போன் எண்ணுடன் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் தீவிரவாதிகள் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இதனை தீவிரமாக கண்காணித்து வந்த டெல்லி சிறப்பு படை போலீசார் டெல்லியில் அப்துல் சுபானை கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் மேவாத்தில் அப்துல் சுபான் தங்கியுள்ளான். தற்போது டெல்லி போலீசார் விசாரணையில் மேலும் இரண்டு பேரது பெயரை தெரிவித்துள்ளான். முகமத் ஷாகித் மற்றும் ராஷித் என்ற இரண்டு பேரது பெயரை விசாரணையின்போது தெரிவித்துள்ளான். அவர்களை கைது செய்ய மேவாத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.


Site Meter