20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 29 ஜுலை 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

அமித்ஷாவுடன் சந்திப்பு:பா.ஜ.க.,வில் இணைகிறார் அரியானா காங்., தலைவர் பிரேந்தர் சிங்

அரியானா
Haryana Cong.leader Pirentar Singh has joined the BJP - India News Headlines in Tamil

அரியானா காங்கிரஸ் தலைவர் சவ்தரி பிரேந்தர் சிங்,நேற்று பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.முன்னதாக கடந்த மாதம் பா.ஜ.க., மாஜி தலைவர் ராஜ்நாத்சிங்கை குஜராத் பவனில் சந்தித்த பின் தற்போது அமித்ஷாவை சந்தித்து இருப்பதால் அவர் பா.ஜ.,வில் இணைவார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் மாநில அரசியலில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமை மீது அவ்வளவு நெருக்கம் இல்லாததும் ஒரு காரணமாக கூறலாம்.
முன்னதாக அரியானா அமைச்சரவையிலிருந்து மாநில மின்துறை அமைச்சர் அஜய் யாதவ்,மாநில முதல்வரை கடுமையாக விமர்சித்து விட்டு தனது ராஜினாமா செய்துவிட்டார். மேலும் அரியானா மாநிலத்தில் லோக்சாபா தேர்தலில் பா.ஜ.க.,7 இடத்திலும் ஆளும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.இதனால் ஹூடா அரசிடமிருந்து பாடம் கற்று கொள்வது தோல்வியில் முடிந்தது.இந்நிலையில் மகாராஷ்டிராவிலும் அரியானா மாநிலத்திலும் இனி காங்கிரஸ் மீள்வது கடினமே.இத்ததைய சூழ்நிலையில் பிரேந்தர் சிங், அமித்ஷாவை சந்தித்து இருப்பதால் அவர் பா.ஜ.க.,வில் இணைவார் என தெரிகிறது.


Site Meter