20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 29 ஜுலை 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

லிபியா நாட்டில் இந்திய நர்ஸ்கள் 800 பேர் தவிப்பு: மீட்டு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு

புதுடில்லி
nurses stuck in Libya fresh worry for govt - India News Headlines in Tamil

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்த, ஈராக் நகரங்களில் சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்கள், சில நாட்களுக்கு முன், பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலும், நூற்றுக்கணக்கான இந்திய நர்ஸ்கள் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்க, இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் உள்ளது, லிபியா நாடு. இதன் அதிபராக, 40 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த கடாபி, 2011ல், இங்கு நிகழ்ந்த உள்நாட்டு கலவரத்தில் கொல்லப்பட்டார். அதன் பிறகு, அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, பிரதமராக, அப்துல்லா அல் - தானி உள்ளார்.கடந்த வாரம் முதல், 'ஜிஹாதி' எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகள், தலைநகர் திரிபோலி மற்றும் முக்கிய நகரமான பென்காஜியின் விமான நிலையங்களை கைப்பற்றுவதற்காக, கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இதில், கடந்த சில நாட்களில், 180 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த, 2011ல், அங்கு, பயங்கர உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், அங்கிருந்து அப்போது பத்திரமாக மீட்கப்பட்டனர். இப்போது அங்கு, 6,000 இந்தியர்கள் உள்ளனர்; அவர்களில் பெரும்பாலானோர், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அது போல், திரிபோலி மற்றும் பென்காஜி நகரங்களில், 800க்கும் மேற்பட்ட பெண் நர்ஸ்கள் உள்ளனர்.

இந்த இரு நகரங்களிலும் நடைபெற்று வரும் சண்டையால், இந்திய நர்ஸ்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியாற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று சந்தித்த இந்திய தூதர், அசார் ஏ.எச்.கான், நர்ஸ்கள் விரும்பினால், பத்திரமாக வெளியேற்றத் தயார் என, தெரிவித்துள்ளார்.பிற இந்தியர்களுக்கும் அவர் விடுத்துள்ள அழைப்பில், 'சண்டை அதிகரித்தால், திரிபோலி மற்றும் பென்காஜி நகரங்களில் இருந்து, சிறுசிறு குழுக்களாக, அண்டை நாடான துனிசியா சென்று விடுங்கள்' என, அறிவுறுத்தியுள்ளார்.லிபியா பிரச்னையால், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு, அடுத்த தலைவலி ஏற்பட்டுள்ளது.


Site Meter