20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 22 ஆகஸ்ட் 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

மதுவிலக்கு - கேரள முதல்வருக்கு குமரிஅனந்தன் பாராட்டு

சென்னை
Kumari Anandan thanks to Kerala CM about ban of alcohol in Kerala - India News Headlines in Tamil

கேரளத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ள அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டிக்கு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில்தான் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு அண்ணா வரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார்கள். இப்போது குஜராத்தில் மட்டுமே மதுவிலக்கு உள்ளது. தற்போது கேரளத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் எனக் கூறி அதற்கான முயற்சிகளில் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி ஈடுபட்டுள்ளார். இது பாராட்டுக்குரியது. இதனை அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Site Meter