20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 22 ஆகஸ்ட் 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை சந்திப்பு

டெல்லி
Modi's meeting with the Tamil National Alliance tomorrow - India News Headlines in Tamil

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை (ஆகஸ்ட் 23) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளனர். அரசியல் சாசனத்தின் 13 ஏ சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பாக மோடியுடன் அவர்கள் விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.
 
டெல்லி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்துப் பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி., எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அரசியல் சாசனத்தின் சட்டத்திருத்தம் 13 ஏ-வை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சட்டப்பிரிவை அமல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு ஏற்கெனவே இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது. அந்த வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றுவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்று மோடியிடம் வலியுறுத்தவுள்ளோம்” என்றார்.
 
இந்தியா – இலங்கை இடையே 1987-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஏ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகார பரவலை ஊக்குவிக்கும் வகையில், மாகாண கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அதை இலங்கை அரசு அமல்படுத்த மறுத்து வருகிறது. குறிப்பாக மாகாண கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரத்தையும், நிலம் தொடர்பான அதிகாரத்தையும் அளிக்க அதிபர் ராஜபக்ச மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Site Meter