20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 2 செப்டம்பர் 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

அருண் ஜேட்லி இன்று மருத்துவமனையில் அனுமதி

தில்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக் குறைவு காரணமாக திங்கட்கிழமை மாலை தில்லி சாகெட் பகுதியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

அருண் ஜேட்லியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள், அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அதன்படி, இன்று அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனினும், இந்த அறுவை சிகிச்சை எதற்காக என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.அவர் தற்போது நலமாகவே உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Site Meter