20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 3 செப்டம்பர் 2014

இந்தியச்செய்திகள் : Latest India News

ஆந்திராவின் புதிய தலைநகராக கர்னூலை அறிவிக்கக் கோரி ராயலசீமாவில் பந்த்

Plea to make Kurnool Andhra Pradesh State capital - India News Headlines in Tamil

ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரை தேர்வு செய்யும் பணி இழுபறியில் உள்ள நிலையில், கர்னூலை தலைநகராக அறிவிக்கக் கோரி ராயலசீமாவில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு கர்னூல் பகுதியை புதிய தலைநகராக அறிவிக்கக் கோரி ராயலசீமா பகுதி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்னூல் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், ராயலசீமா பகுதி முழுவதும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Site Meter