20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 1 ஏப்ரல் 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

கொல்கத்தா மேம்பாலத்தை கட்டிவந்த நிறுவனத்தின் மீது கொலை வழக்கு - 5 அதிகாரிகள் கைது

கொல்கத்தா
Indian company charged in Kolkata overpass collapse - India News Headlines in Tamil

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக,  அந்த நிறுவனத்தின் 5 அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத்தில் உள்ள அதன் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த பிரமாண்ட மேம்பாலத்தின் 60 மீ. அளவு கட்டுமான பகுதிகள் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள், பாலத்தின் கீழ் கடை வைத்திருந்த வியாபாரிகள், பொதுமக்கள் என 24 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் விடிய விடிய மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில போலீசாருடன் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குறித்த நெடுஞ்சாலையை ஒன்றரை ஆண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு 7 ஆண்டுகள் எடுத்துள்ளன.

இடிந்துவிழுந்த பாலத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்காக, மீட்புப் பணியாளர்கள் பெரும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இரவு முழுவதும் முயன்றுவந்தார்கள்.இனிமேலும் எவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்று இப்போது அவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.


Site Meter