19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 5 ஏப்ரல் 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

இந்தியாவில்

புது தில்லி
India launches highspeed Gatimaan Express - India News Headlines in Tamil

இந்திய ரயில் போக்குவரத்து வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில், தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா நோக்கி புறப்படும் முதல் கதிமான் ரயில் சேவையை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது அலுவலகத்தில் இருந்து ரிமோட் மூலம் காலை 10 மணியளவில் தொடங்கி வைத்தார்.

கதிமான் அதிவேக விரைவு ரயில் (12050), வார நாள்களில் காலை 8.10 மணிக்கு தில்லி நிஜாமுதின் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஆக்ரா கண்டோன்மன்ட் ரயில் நிலையத்தை 9.50 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் குறிப்பாக  டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது. தாஜ் மஹால் மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கிழமையை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களில் இருமார்க்கமாகவும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய கதிமான் ரயில், 184 கி.மீ. தூரத்தை 100-110 நிமிடங்களில் கடக்கும். முன்னதாக டெல்லி, ஆக்ரா இடையேயான தூரத்தை 118 நிமிடங்களில் கடக்கும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் தான் அதிவேக ரயிலாக இருந்தது. இது, சதாப்தி விரைவு ரயிலின் வேகத்தைக் காட்டிலும் மணிக்கு 10-20 கி.மீ. அதிகமாகும். ஏற்கெனவே மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களைக் கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் தில்லி-ஆக்ரா வழித்தடம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ரயிலில் 12 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் கட்டணம் சதாப்தி ரயில் கட்டணத்தைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக இருக்கும். கதிமான் ரயில் சொகுசு பெட்டியில் செல்ல ரூ.1,365-ம், சதாராண பெட்டியில் செல்ல ரூ.690-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயிலில் பல்வேறு விதமான உணவுகள், இலவச வைஃபை, பொழுதுபோக்கு ஆகியவை உள்ளன.


Site Meter