20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 10 ஏப்ரல் 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

கேரளா கொல்லம் கோயில் வெடி விபத்து - பலி 110

கொல்லம்
Deadliest fireworks accident in Kerala's history. 105 dead, 350 injured in Kollam temple fire. - India News Headlines in Tamil

இந்த விபத்து குறித்த விவரங்களை அறிய

  • திருவனந்தபுரம் மத்திய கட்டுப்பாட்டு அறை: 0471 2528300
  • கொல்லம் கட்டுப்பாட்டு அறை: 0474 2794002

ஆண்டுதோறும் கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் வருடம் தோறும் திருவிழா நடைபெறும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும்.  இன்று அதிகாலை 3 மணியளவில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது, அதிலிருந்து சென்ற தீப்பொறியானது வெடிப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் விழுந்தது. இதனையடுத்து வெடிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீ விபத்தில் காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு விரைந்து உள்ளது.

கோவில் திருவிழாவில் போட்டி போட்டு பட்டாசு வெடித்ததன் காரணமாகவே இந்த துயரச்சம்பவம் நேர்ந்து உள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.

கேரள அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதிஉதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளாகி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் தீ விபத்துக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா இரங்கல் தெரிவித்தார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொல்லம் கோயிலில் ஏற்பட்ட இந்த விபத்து, கேரள மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


Site Meter