20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 11 ஏப்ரல் 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்லூரியில் பயின்ற 2 இந்திய மாணவர்கள் கொலை.

Ukraine

உக்ரைன் நாட்டில் உள்ள உஸ்கரோட் நகர மருத்துவ கல்லூரியில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பிரணவ் ஷைன்தில்யா, காசியாபாத்தைச் சேர்ந்த அன்குர் சிங் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த இந்திரஜித்சிங் சவுகான் ஆகியோர் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை, உள்நாட்டு மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய மாணவர்கள் 3 பேரையும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், அந்த மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பிரணவ் சைன்தில்யாவும், அன்குர் சிங்கும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திரஜித்சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திரஜித் சிங் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு இந்திய  மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


Site Meter