20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 12 ஏப்ரல் 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

2016 இந்தியாவின் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.

புது தில்லி
Rajinikanth, Sania Mirza, Priyanka Chopra honoured with Padma awards - India News Headlines in Tamil

2016ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்குத் தேர்வான 112 பேரில் 56 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மாதம் 29ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக விருதுகள் வழங்கும் விழா தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (12/04/2016) நடைபெற்றது. 

பத்ம விபூஷண்

இந்தியா வில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய விருது பத்ம விபூஷண்.  விஞ்ஞானியும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநருமான வி.கே.ஆத்ரே, நடிகர் ரஜினிகாந்த், இந்துஸ்தானி பாடகி கிரிஜா தேவி, பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. ஏற்கெனவே பத்ம பூஷண் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நடப்பாண்டு பத்ம விபூஷண் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்ம பூஷண்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மறைந்த ஆன்மிக தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தேஜோமயானந்தா, பாடகர் உதித் நாரயண், சிற்பி ராம் வி. சுடர், மணிப்புரி நாடக கலைஞர் ஹேய்ஸ்னம் கன்ஹய்லால், இந்தி, தெலுங்கு எழுத்தாளர் யர்லகட்டா லட்சுமி பிரசாத், சமஸ்கிருத அறிஞர் என்.எஸ். ராமானுஜ தட்டாச்சார்யா, பஞ்சாப் செய்தியாளர் பர்ஜிந்தர் சிங் ஹம்தார்ட், இரைப்பை குடல் மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி, விஞ்ஞானி ஏ.வி. ராமா ராவ் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டன.

பத்ம ஸ்ரீ

பிரியங்கா சோப்ரா, விளையாட்டு வர்ணனையாளர் சுஷில் தோஷி, மறைந்த நடிகர் சயீத் ஜெப்ரி, மாஸ்டர்கார்டு தலைமைச் செயல் அதிகாரி அஜய்பால் சிங் பங்கா , எழுத்தாளர் திரேந்திரா நாத் பேஸ்பரூவா, சுற்றுச்சூழல் காப்பாளர் சைமன் ஓரான், வழக்கறிஞர் உஜ்வல் நிஹாம், ஜவுளி வடிவமைப்பாளர் ஸ்ரீபாஸ் சுபாகர் டெல்லியின் அனில் குமாரி மல்ஹோத்ரா, எம்.வி. பத்மா ஸ்ரீவஸ்தவா, குஜராத்தின் சுதிர் வி.ஷா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.


Site Meter