20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 18 ஏப்ரல் 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

ரியோ ஒலிம்பிக் 2016 : தீபா கர்மாகர் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.

ரியோ டி ஜெனிரோ
Olympics 2016: Dipa Karmakar becomes the first Indian female gymnast to qualify for the Olympics - India News Headlines in Tamil

இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் ஓலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், (2016 Summer Olympics), பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் 5, 2016 முதல் 21, 2016 நடைபெற உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரியோ டி ஜெனிரோவில் நடக்கிறது. இதில் இந்தியாவின் தீபா கர்மாகர், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தகுதிச் சுற்றில் 4-வது இடம் பிடித்ததை அடுத்து அவர் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

22 வயதாகும் தீபா கர்மாகர், 52.698 புள்ளிகள் பெற்று தகுதிச் சுற்றில் தேர்ச்சி அடைந்தார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்திய வீராங்கனை என்ற பெருமை மட்டுமின்றி, 52 வருடங்களுக்கு பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியில் பங்குபெறும் இந்தியர் என்ற பெருமையும் தனதாக்கிஉள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை11 ஆண்கள் ஜிம்னாஸ்டிக் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டு உள்ளனர். கடந்த 1952-ம் ஆண்டு இரண்டு வீரர்களும், 1956-ம் ஆண்டு மூன்று வீரர்களும், 1964-ம் ஆண்டு 6 வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இப்போதுதான், 52 வருடங்களுக்கு பின்னர், இந்தியர் ஒருவர் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதிப் பெற்று உள்ளார். ஜிம்னாஸ்டிக்ஸ் சர்வதேச கூட்டமைப்பும் தீபா கர்மாகர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துக் கொள்வதை உறுதிசெய்து உள்ளது. இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தீபா கர்மாகர் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலாவை சேர்ந்தவர். இவரது அப்பா துலால், பளுதுாக்குதல் பயிற்சியாளர். அப்பாவின் ஆசைப்படி ஜிம்னாஸ்டிக்சில் 6 வயதில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் 'கீழே விழுந்து விடுவோமா' என அஞ்சினாராம். இவரது பாதங்கள் தட்டையாக இருந்ததும் பிரச்னையாக அமைந்தது. தவிர, திரிபுரா போன்ற இடங்களில் ஜிம்னாஸ்டிக்சிற்கு ஏற்ற உபகரணங்கள் இல்லை. 'ஷூ' மற்றும் போட்டிக்கு உரிய உடை இல்லாமல் தவித்துள்ளார். பொருந்தாத உடையை கடனாக பெற்று போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும் இவருக்கு உண்டு.

இப்படி வறுமையை கடந்த தீபா, கடந்த 2011ல் நடந்த தேசிய விளையாட்டில் 5 தங்கம் வென்றார். சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் 'புரோடுனோவா வால்ட்' பிரிவில் அதிகபட்சமாக 15.100 புள்ளிகள் பெற்றார். இவருக்கு கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

2014 காமென்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவிற்கு முதன்முறையாக வெண்கலப் பதக்கம் பெற்றுத்தந்து வரலாற்று பெருமை சேர்த்தவர். ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தீபாவின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.


Site Meter