19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 31 ஜுலை 2016

இந்தியச்செய்திகள் : Latest India News

கடல் மேற்பகுதியில், மாயமான ஏ.என்.,32 ரக விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது

சென்னை

சென்னையிலிருந்து அந்தமானுக்கு ஜூலை 22ம் தேதி 29 பேருடன் சென்ற ஏ.என்.32 விமானம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி நடந்து வந்தது. ஆனால் மாயமான. விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், விமானம் விழுந்ததாக கருதப்படும் கடற்பகுதியின் மேற்பரப்பில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த தேடுதல் பணி முடிவுக்கு வந்தது. 15 கடற்படை கப்பல்கள், 18 விமானங்கள் மூலம் விமானம் தேடும் பணி நடந்து வந்தது. கடலில் இருந்து 10க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், விமானத்தின் பாகங்களோ, அல்லது, விமான குழுவினரையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அதிநவீன கப்பல்மூலம் மாயமான விமானத்தை தேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், சாகர் நதி மற்றும் சமுத்ரா ரத்னாகர் என்ற அதிநவீன கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.


Site Meter