20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 25 ஜுன் 2009

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

போக்குவரத்துத் துறை தனியார்மயமாகாது: அமைச்சர் நேரு உறுதி

சென்னை, ஜூன். 25-

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை நந்டத்தில் உள்ள போதிலும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. என். நேரு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளிக்கும்போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:- "தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும் நாட்டிலேயே கிலோமீட்டருக்கு மிகக் குறைந்த பஸ் கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது.

மேலும் புதிய ஊழியர்கள் நியமனம், ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் ஆகியவை காரணமாகவும் தமிழக போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த செலவு அதிகரித்துள்ளது. இதனால் 2007-08-ம் ஆண்டில் ரூ.379 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2008-09-ம் ஆண்டில் மொத்தம் ரூ.710 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் நாளொன்றுக்கு ரூ.6,500 வருவாய் கிடைக்கிறத் ஆனால், பஸ்கள் பராமரிப்பது உள்பட எல்லாவற்றுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.8,500 செலவாகிறது.

பஸ்களுக்கு டீசல் வாங்க 2005-06-ல் ரூ.1,583 கோடி செலவானத் 2008-09-ல் இந்தத் தொகை ரூ.2,129 கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டம் காரணமாக போக்குவரத்துக் கழகங்களின் மொத்த கடன் சுமை ரூ.1,337 கோடியாக உள்ளது.

சென்னையில் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்த ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு செயல் திட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகளுக்குள் ரூ.1,300 கோடி செலவிட மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் மாதிரி ஓட்டுநர் பயிற்சிக் கழகம் அமைப்பதற்கான செயற்குறிப்புக்கு மத்திய கப்பல் - சாலைப் போக்குவரத்து அமைச்சரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது" என்றார் அமைச்சர் நேரு.


Site Meter