19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 23 மார்ச் 2012

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

எண்டகவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாரா சுபாஷ் பண்ணையார்?

சென்னை, மார்ச். 23-
Did Subhash Pannaiyar encountered? - Tamilnadu News Headlines in Tamil

பசுபதி பாண்டியன் படுகொலை வழக்கில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார் போலீசாரால் தேடப்பட்டுவந்தார். சுபாஷ் பண்ணையார் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருந்து வந்தார். தமிழக போலீஸ் தனிப்படை அவரை தேடிவந்த நிலையில், இன்று காலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சுபாஷ் பண்ணையார் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேசபண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார் தலித் இன தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.  

இவர் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருக்கிறார் என்கிற தகவல் கிடைத்ததால், குஜராத், கொல்கத்தா, மும்பை, ஆந்திரா போன்ற பகுதிகளு‘க்கு தமிழக தனிப்படை போலீசார் விரைந்து சென்று தேடி வந்தனர். பழிக்கு பழிக்கு வாங்கும் முயற்சியாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களும் 3 தனிப்படைகளாக பிரிந்து தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று(23.3.2012) காலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சுபாஷ் பண்ணையார் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவல் மிகவும் நம்பகமான இடத்தில் இருந்து வந்தது.

போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாரா? பசுபதிபாண்டியன் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்ற கேள்வி மட்டும் எழுந்தது. சுபாஷ் பண்ணையாருக்கு மும்பையில் தொழில் விரோதிகள் இருப்பதாகவும், அவர்கள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று தகவல் வந்தது.

இந்த செய்தி காட்டூத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. இதனால் தென்மாவட்டங்களில் பதட்டம் நிலவியது. இந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள சுபாஷ் பண்ணையார் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது செல்பொன் சுவிச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.  

உண்மையில் சம்பவம் நடந்துவிட்டதா? அல்லது அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிக்கொண்டு வரும் சுபாஷ், தற்போதும் வேறு நம்பரை மாற்றிவிட்டாரா? என குழப்பத்தில் இருந்தனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

மதியம் 2 மணி நிலவரப்படி, சுபாஷ் பண்ணையாரை போலீசார் ரகசிய இடத்தில் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வந்தது. தற்போதைய நிலவரப்படி, சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகவும், அவரிடமே பேசி உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுபாஷ் பண்ணையார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படவில்லை என ஆதரவாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். காவல்துறையிடம் இருந்து அறிவிப்பு எதுவும் வராததால், சுபாஷ் பண்ணையாரின் எண்டகவுண்டர் விவகாரம் கேள்விக் குறியாகவே உள்ளது. உண்மைகள் விரைவில் வெளியாகும்.


Site Meter