20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 9 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - மக்கள் நலக் கூட்டணியின் தொகுதி உடன்பாடு

சென்னை
Tamil Nadu election 2016: Makkal Nala Kootani latest seats list - Tamilnadu News Headlines in Tamil

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16.05.2016 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் 124 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு செய்துகொண்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தமிழக முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திப்பதென்று 23.03.2016 அன்று உடன்பாடு கண்டது. தற்போது இந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், இணைந்துபோட்டியிட முடிவெடுத்திருப்பதால்,கீழ்க்கண்டவாறு தொகுதிகள் எண்ணிக்கை மாற்றி இன்று (09.04.2016) முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

2016 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்: மக்கள் நலக் கூட்டணியின் தொகுதி உடன்பாடு

தேமுதிக 104 தொகுதிகள்
 மதிமுக  29 தொகுதிகள்
 தமாகா  26 தொகுதிகள்
 சி.பி.ஐ.(எம்)  25 தொகுதிகள்
 வி.சி.க  25 தொகுதிகள்
 சி.பி.ஐ  25 தொகுதிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காக தேமுதிக 20 தொகுதிகளையும், மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் 6 தொகுதிகளையும் விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Site Meter