20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 9 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் - முதல்வர் ஜெயலலிதா உறுதி

சென்னை
Tamil Nadu election 2016: Chief minister Jayalalithaa promises alcohol prohibition in Tamil Nadu - Tamilnadu News Headlines in Tamil
சென்னை தீவுத்திடலில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடக்கிவைத்து முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.
இதில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
மதுவிலக்கு குறித்து தீவிரமாக ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்பதால் அதுகுறித்து பேசாமல் இருந்தேன்.
அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் 'பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டுவருவது என்பது இயலாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதைத்தொடர்ந்து கடைகளுடன் இணைந்த மதுபானகூடங்கள் மூடப்படும், மேலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களளை மீட்கும் வகையில் மீட்பு நிலையங்கள் திறக்கப்படும்.' என்று உறுதியளித்தார்.
'மதுவைப் பற்றி அறியாத ஒரு தலைமுறைக்கு, மதுவை அறிமுகப்படுத்திய திமுக தலைவர் கருணாநிதியும், திமுக-வினரும் இது பற்றிப் பேசுவது விநோதமானது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்று இதைத் தான் சொல்லுவார்களோ? மதுவிலக்கைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கருணாநிதி பேசக் கூடாது. திமுக-வினர் பேசக்கூடாது' என்றார்

Site Meter