22 ஜுலை, 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 10 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியீட்டார்

சென்னை
Tamil Nadu election 2016: DMK Election Manifesto 2016 - Tamilnadu News Headlines in Tamil

2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் (10/5/2016)  இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை திமுகவின் தலைவர் கருணாநிதி வெளியிட க.அன்பழகன் பெற்று கொண்டார்.

மதுவிலக்கை மீண்டும் கொன்டு வரவும் கருணாநிதி உறுதி.

தேர்தல் அறிக்கை விவரம்:

 • விவசாய கடன் தள்ளுபடி
 • வேளாண்மைக்கு தனிநிதிநிலை அறிக்கை
 • டாஸ்மார்க் பணியாளர்களுக்கு மாற்று பணி
 • நம்மாழ்வார் பெயரில் இயக்கை வேளாண்மை பயிற்சி மையம்
 • 2லட்சம் இளைஞர்களை சேர்த்து வணிக அமைப்பு
 • மீண்டும் சேதுசமுத்திரம் கொண்டு வரப்படும்
 • கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
 • அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
 • நெல், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தப்படும்
 • ஆவின் பால் லிட்டருக்கு ரூ 7 குறைப்பு
 • ஆட்சி மொழியாக தமிழ்
 • தமிழகத்தில் லோகாயுக்தா அமைக்கப்படும்
 • கிரானைட் அரசே ஏற்று நடத்தும்
 • வேலையில்லா பட்டாதாரிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை
 • மதுவிலக்கிற்க்கு தனிச்சட்டம் முதியோர் உதவித்தொகை ரூ 1300 ஆக உயர்த்தப்படும்
 • சுயதொழில் தொடங்க ரூ 1 இலடசம் வழங்கப்படும்
 • மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள்
 • மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம்
 • விசைத்தறிகளுக்கு 750 யுனிட் இலவச மின்சாரம்
 • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 54 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும்
 • கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலை., கட்டப்படும்
 • பொங்கல் பரிசு வேட்டி சேலையுடன் ரூ500/-
 • திண்டுக்கல் வேலூர்,சென்னையில் தோல் பூங்கா
 • நீர்பாசனத்துறைக்கு தனியான அமைச்சர், சென்னை போல் மூழ்காமல் இருக்க திட்டம்
 • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும்
 • ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு
 • 2000 கோடி ஒதுக்கீட்டில் 200 தடுப்பணைகள்
 • சென்னையில் வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.
 • ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அண்ணா உணவகம் அமைக்கபடும்.
 • தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் பால்
 • காஞ்சிபுரத்தில் பட்டு பூங்கா
 • நெசவாளர் கூட்டுறவு வங்கி
 • துப்புரவு தொழிலாளர்களுக்கு மழை காலம் நிவாரணம் ரூ5 ஆயிரம்
 • அரசு ஊழியர்கள் ஆசியர்களுக்கு புதிய ஒய்வூதியம் திட்டம் ரத்து செய்யப்படும
 • ஆட்லோ ஒட்டுந்ர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ 10 ஆயிரம்
 • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை
 • கூடன்குளம் எதிர்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்
 • கலந்தாய்வில் தேர்வாகும் ஏழை மாணவர் தொழிற் கட்டணம் அரசே செலுத்தும்
 • தமிழகத்தில் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும்
 • தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்
 • 2 லட்சம் இளைஞர்கள் உதவியோடு கிரானைட் தாதுமணல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்
 • வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி களங்களாக மாறும்
 • கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும்
 • நியாயவிலைகடைகளில் அனைத்து நாட்களில் பொருட்கள் வழங்கப்படும்
 • மதுரை- தூத்துக்குடி வரை, சென்னை- ஓசூர் வரை தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்
 • ஆண் ஒன்றுக்கு 1லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
 • மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும்முறை
 • திருக்குறள் ஆய்வு மையம்
 • 9 மாத பேறுகால விடுமுறை
 • 8வது ஊதியக்குழு
 • எதிர்க்கட்சிகள் பத்திரிக்கைகள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும்
 • திருமண உதவிதொகை ரூ 60 ஆயிரம். 4 கிராம் தங்கம்
 • பேறுகால உதவி தொகை 18 ஆயிரம்
 • தாய் சேய் காப்பீட்டு திட்டம்
 • குடும்ப நலநிதி ஐந்து லட்சமாக உயர்வு
 • பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்கப்படும்.
 • இலவச தங்கும் விடுதிகள்
 • தந்தை பெரியார் பிறந்த நாள் பகுத்தறிவு நாள் அண்ணா பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்
 • கடலோர மாவட்டங்களில் கடல்நீர் குடிநீராக்கும் திட்டம
 • கிராமபுர வீடுகட்டும் திட்ட மானியம் ரூ 3லட்சம்
 • அரிசி திட்டம் தொடரும்
 • வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
 • ஜல்லிக்ஜட்டு ரேக்ளா தடை நீக்க முயற்சி
 • எம்ஜிஆர் திரைப்பட நகரம் மீண்டும் இயங்கும்
 • 3 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் குறை கேட்பு முகாம்
 • கைப்பேசி அரசு விலையில் சலுகை விலை கைப்பேசி
 • பகுதிநேர ஓவிய ஆசிரியர் , தட்டச்சு கணினி பணியாளர் பணி நிரந்தரம்

வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றப்படும் கருணாநிதி உறுதி கூறினார்.


Site Meter