19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 15 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா ஆற்றிய உரை

அருப்புக்கோட்டை
All India Anna Dravida Munnetra Kazhagam general secretary Jayalalithaa meeting in Aruppukottai - Tamilnadu News Headlines in Tamil

14- வேட்பாளர்களை ஆதரித்து கழக நிரந்தர பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்கள் லட்சோபலட்சம் மக்களிடையே இரட்டைஇலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்து எழுச்சியுரை ஆற்றியதையொட்டி வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதி 39-வது வட்டத்தில் பிரச்சார காணோலி காட்சி வாகனம் மூலம் நேரடியாக பொதுமக்கள் கானும் வகையில் புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஜந்தாண்டுகளாக மக்களுக்கு ஆற்றிய கழக அரசின் சாதனைகள், நிறைவேற்ப்பட்ட திட்டங்களின் பேச்சு மற்றும் வேட்பாளர்களை அறிமுகபடுத்தியதையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் இதில் வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ.பேரவை, செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி எம் சி, மீனவரணி மாவட்ட செயலாளர் ஏ.கணேசன், எம்.கண்ணா, பகுதி துணை செயலாளர் ஆர் மதுரைவீரன் எம் சி, வட்ட செயலாளர்கள் நாகலிங்கம், ஆர்.வி.அருண்பிரசாத், ஏ.ஆர்.சிவா, சசிகலா எம்.சி, அசோக், மற்றும் கே.பி.கர்ணன், கே.பி.விஜி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Site Meter