20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 20 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - ஜெயலலிதாவுக்கு எதிராக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி

சென்னை
Tamil Nadu election 2016: Mother Teresa Women's University , Kodaikanal against Jayalalithaa - Tamilnadu News Headlines in Tamil

மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவி போட்டியிடுகிறார்.

வரலாற்றுத்துறையில் முதுகலைப் பட்டமும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர் வசந்திதேவி. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரு முறை துணைவேந்தராகவும், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகவும், தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு திட்டக்கமிஷனின் உறுப்பினராகவும் பதவி வகித்தார். இடதுசாரிகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் சிம்லா போட்டியிடுகிறார்.


Site Meter