20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 28 ஏப்ரல் 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை
People's Welfare Front - Makkal Nala Kootani manifesto - Tamilnadu News Headlines in Tamil

மக்கள் நலக் கூட்டணியின் 80 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அப்போது கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன், தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டணியில் தே.மு.தி.க, த.மா.கா கட்சிகள் ஏற்கனவே தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

 • ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்.
 • அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
 • தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும்.
 • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனி சிறப்பு பஸ் இயக்கப்படும்.
 • பள்ளி மாணவர்களுக்கான சீருடை, புத்தகம், புத்தகப்பை போன்ற விலையில்லாப் பொருட்கள், முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும்.
 • அரசின் சார்பில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும்.
 • இலங்கை அகதிகள் முகாம் மேம்பாடு செய்யப்படும்.
 • அரசுக்கு அறிவுரை வழங்க பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட நெறிமுறைக்குழு அமைக்கப்படும்.
 • உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரிக்க நிபுணர் குழு, உழலை ஒழிக்க "புகார் விசாரணை ஆணையம்" அமைக்கப்படும்.
 • வழக்கு விசாரணை இன்றி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இஸ்லாமிய கைதிகள் விடுதலை முயற்சிக்கப்படும்.
 • மத நல்லிணக்கம் பேணப்படும். மத வன்முறைகள் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
 • லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படுவதோடு, கீழ்மட்ட அரசு நிர்வாகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
 • முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த, சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்யப்படும்.
 • வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் அமைக்கப்படும்.
 • வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
 • மீனவர் , மாற்று திறனாளி நலன், குழந்தைகள் நலன் காக்கப்படும்.
 • முதியவர்களுக்காக நடமாடும் மருத்துவ சேவை வாகனம் இயக்கப்படும்.
 • மின்னணுக் கழிவுகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை வசதி உருவாக்கப்படும்.
 • மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
 • காவலர்களுக்கு சங்கம் வைக்கும் உரிம, 8 மணி நேரம் பணி உறுதி, பெண் காவலர்கள் பகல் நேரத்தில் மட்டுமே பணி இரவில் கண்டிப்பாக பணி அமர்த்தப்பட மாட்டாது மற்றும் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்.
 • கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
 • பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வாடகை வீடு திட்டம், ரூ. 2 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு, மாத ஓய்வு ஊதியம் அதிகரிப்பு, வட்டியில்லா கடனில் வாகன வசதி செய்யப்படும்.
 • பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
 • பால் கட்டணம் குறைக்கப்படும்.
 • மகளிர் சுய உதவி கடனை அரசே செலுத்தும்.
 • மக்கள் பிரச்சனைகளை துணிவோடு வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு அங்கீகாரம்.
 • நெசவாளர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
 • படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
 • கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
 • குளிர்பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீர் உறிஞ்சுதல் தடுக்கப்படும்.
 • சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுவதோடு, சட்டமன்ற விவாதக் குறிப்புகள் அனைத்தும் அரசின் வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
 • சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும், அவர்களுக்கென்று தனி காவல் பிரிவும் உருவாக்கப்படும்.
 • திருநங்கைகளுக்கு தனி வாரியம், பாதுகாப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக்கப்படும்.
 • சில்லறை வணிகர் நலன் காக்கப்படும்.

Site Meter