26 மார்ச், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 5 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - அதிமுக தேர்தல் அறிக்கை

பெருந்துறை
Tamil Nadu election 2016: ADMK releases manifesto - Tamilnadu News Headlines in Tamil

பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை சற்று முன் வெளியிட்டார் முதல்வர் அம்மா. முதல் பிரதியை டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி. பெற்றுக் கொண்டார்.

இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

  • அரசு கேபிள் டிவி பயன்படுத்துவோருக்கு இலவச செட்டாப் பாக்ஸ்
  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச மொபைல் ஃபோன்
  • விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
  • 2016-2021 காலத்தில் 40,000 கோடி ரூபாய் பயிர்கடன்
  • விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
  • காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
  • முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை
  • சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தமிழகத்தில் அனுமதிக்க முடியாது
  • பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும்.
  • மீனவர்கள் நிவாரணத் தொகை ரூ. 5,000 ஆக ஆக்கப்படும்.
  • மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்
  • மீனவர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
  • உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
  • மீன்பதன பூங்காக்கள் அமைக்க தொடரந்து நடவடிக்கை எடுக்கப்படும்
  • புதிய சாலைகள் அமைக்கப்படும்.
  • சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
  • மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000
  • மகளிர் பேறுகால விடுமுறை 9 மாத காலமாக உயர்த்தப்படும்
  • மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் இலவச இணைய இணைப்பு
  • பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்
  • அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை
  • பொங்கல் திருநாளில் கோ-ஆப்டெக்ஸில் துணிமணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன்
  • வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு
  • மகளிருக்கு ஸ்கூட்டருக்கு 50 % மானியம்
  • ஏழை, எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்காக அம்மா பேங்கிங் கார்டு
  • வழக்கறிஞர் சேம நலநிதி 7 லட்சமாக உயர்வு
  • சிறுவர், சிறுமியருக்கு வைட்டமின் சி மாத்திரை
  • தடையில்லா மின்சாரம்
  • கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் இருப்பவர்களின் கடனை அரசு செலுத்தும்
  • லோக் ஆயுக்தா அமைக்கப்படும்
  • உலமா ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாகவுன், விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும்
  • அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்
  • புதிய கிரானைட் கொள்கை அமைக்கப்படும்.
  • தாது மணல் விற்பனையை அரசே ஏற்கும்
  • படிப்படியாக மதுவிலக்கு
  • பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை-ஃபை வசதி
  • தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இலவச காலை சத்துணவு சிற்றுண்டி
  • மகளிருக்கு ஆட்டோ வாங்க மானியம்
  • ஏழை எளிய மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்
  • அரசு ஊழியர் வீடு கட்ட 40 லட்சம் கடன்.
  • தாலிக்குத் தங்கம் ஒரு சவரன்
  • தேவாலயங்களை புதுபிக்க அரசு மானியம்
  • பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50% மானியம்
  • பால் விலை ஒரு லிட்டர் ₹.25க்கு கிடைக்க நடவடிக்கை!
  • பெண்களுக்கு ஆட்டோ வாங்க மானியம்!
  • சத்துணவு வழங்கும் திட்டத்தில் இனி காலையில் சிற்றுண்டி!

Site Meter