22 ஜுலை, 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 7 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் காரில் இருந்து 9 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி
Rs. 9 lakh seized from Sarathkumar's vehicle - Tamilnadu News Headlines in Tamil

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரையும் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டடுள்ளனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர்.

உடனே அந்த பணம் அனைத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறும்போது, ''உரிய ஆவணங்கள் இன்றி பணம் அந்த காரில் வைத்திருந்ததை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அந்த பணத்திற்குண்டான ஆவணங்களை அவர்கள் காட்டும்பட்சத்தில் அந்த பணம் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படும்" என்றனர்.


Site Meter