20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 12 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

2016 தேர்தல் வேட்பாளர்கள்: 594 கோடீஸ்வரர்கள் - 324 பேர் மீது கிரிமினல் வழக்கு

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது உள்ள குற்ற நடவடிக்கை வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு' ( Association for Democratic Reforms - ADR) என்று நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆய்வு தொகுதிகளில் மொத்த எண்ணிக்கை 234
ஆராயப்பட்டன மொத்த வேட்பாளர்கள் 1581
கிரிமினல் வழக்குகள் வேட்பாளர்கள் 324 (20%)
தீவிர கிரிமினல் வழக்குகள் வேட்பாளர்கள் 178 (11%)
கோடீஸ்வர வேட்பாளர்கள் 594 (38%)
பட்டதாரி வேட்பாளர்கள் 709 (45%)
பான் அட்டை விவரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் 327 (21%)
மொத்த பெண் வேட்பாளர்கள் 152 (10%)
வருமானவரி தாக்கல் செய்த மொத்த வேட்பாளர்கள் 833 (53%)

சென்ற 2011 தேர்தலில் 294 கோடீஸ்வர வேட்பாளர்களும், 76 தீவிர கிரிமினல் வழக்குகள் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.


Site Meter