20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 18 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

சட்டசபை பதவியேற்பு விழாவிற்கு தயார்

சென்னை

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், வெற்றி தோல்வி பற்றி தெரியாத நிலையிலேயே பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக, அதிமுகவினர் செய்யத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியள்ளன.

பதவி ஏற்புவிழவிற்காக திமுக தரப்பு சென்னை வர்த்தக மையத்தை தயார் செய்துள்ளதாகவும் அதிமுக தரப்பினருக்கு வழக்கம் போல சென்னை பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழா மண்டபமும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் ஆளுநர் மாளிகையிலும் பதவி ஏற்பு விழாவை நடத்த ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக்கிடக்கிறது. தமிழகத்தின் ஜனநாயகத்திருவிழாவில் பங்கேற்று கடமையாற்றிய வாக்காளர்கள் டீக்கடையில் தொடங்கி ஜ.டி. நிறுவனங்கள் வரை அதைப் பற்றியே பேசி வருகின்றனர்.

மக்களின் தீர்ப்பு யாருக்கு என்பது இன்னும் 20 மணி நேரத்திற்குள் தெரிய வந்து விடும். நிச்சயம் தமிழக மக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் தங்களை அமர்த்துவார்கள் என்று திமுக, அதிமுக கட்சிகள் உறுதியாக கூறி வருகின்றனர்.


Site Meter