20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 20 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

மக்களின் தீர்ப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது - ஜி.கே.வாசன்

சென்னை

தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

"மக்களின் தீர்ப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது. வருங்காலங்களில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

கூட்டாட்சியை மக்கள் விரும்பவில்லை. ஆனாலும் எங்கள் கூட்டணி மக்கள் நலனுக்காக பாடுபடும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. மக்கள் சார்ந்த இயக்கமாக செயல்படும். புதிய அரசாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக தலைமைக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் தோல்வி, மக்களின் தோல்வி என்பது புதிதல்ல. வருங்காலங்களில் பண நாயகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. எங்களுக்கு காலஅவகாசம் போதவில்லை. தேர்தல் தோல்வி குறித்து கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி கூட்டறிக்கை வெளியிடுவோம். தேர்தல் தோல்விக்கு வைகோ தான் காரணம் என்று இணைய தளங்களில் வருவது தவறான தகவல். இதனை முற்றிலும் மறுக்கிறேன்.

மற்ற கட்சிகள் இல்லாமல் அதிமுக, திமுக மட்டுமே சட்டப்பேரவைக்கு செல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. வருத்தம் அளிக்கிறது" என்று ஜி.கே வாசன் தெரிவித்தார்.


Site Meter