20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 25 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

சென்னை

'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நேற்று கூறியதாவது: கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சில இடங்களில், 40 - 42 டிகிரி, 'செல்சியஸ்' வெப்பம் பதிவாகிறது. வெப்பம் அதிகரிக்கும்போது, வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்ய வாய்ப்பு உண்டு. வெப்ப சலனம் மூலம் மழை பெய்ய, கடல் காற்று ஈரப்பதத்துடன், தரைக்கு வரவேண்டும். தமிழகத்தில் கடல் காற்று, நேற்று பிற்பகலில் தரைக்கு வந்துள்ளது. இது, இன்னும் கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்தால், வெப்பச் சலனத்தின் மூலம் மழை பெய்திருக்கும். தாமதமாக வந்ததால் பெய்யவில்லை. தற்போதுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், இன்று முதல், 29ம் தேதி வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். அதிகபட்சமாக, நேற்று, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 42 டிகிரி, செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. மதுரை, சேலம், வேலுார் நகரங்களில், 40 டிகிரி, செல்சியஸ் வெப்பம் நிலவியது. சென்னையில் இன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 40; குறைந்தபட்சமாக, 30 டிகிரி, செல்சியஸ் வெப்பம் நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.


Site Meter