20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 29 ஜுலை 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

சன் குழும அதிபர் கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில், ரூ.579 கோடி செலுத்தும்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி

கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் ஆகியோர் சார்பாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் நிர்வகிக்கப்பட்டு வந்த 35 கோடிக்கும் அதிகமான அதாவது 58.46 சதவீத பங்குகள், கடந்த 2015ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் இணை நிறுவனர் அஜய் சிங்குக்கு கைமாற்றப்பட்டது.

இதுதொடர்பாக, உரிய தொகை ஏதும் அஜய் சிங் தரப்பில் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை பராமரித்த காரணத்திற்காக, கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ரூ.690 கோடி வழங்கவும் அஜய் சிங் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதுவரை உரிய பதில் கிடைக்காததால், இதுதொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் தரப்பில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், பங்கு விற்பனை தொடர்பாக, ரூ.580 கோடியை, 5 தவணைகளாக கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு வழங்கும்படி, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தருவதாக ஒப்புக்கொண்ட ரூ.690 கோடி பராமரிப்புச் செலவுத்தொகையையும் உடனே வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Site Meter