20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 29 ஜுலை 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

பயணிகளின் வசதிக்காக, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிப்பு

சென்னை

பயணிகளின் வசதிக்காக, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
எர்ணாகுளம் - ஹவுரா சுவிதா அதிவேக சிறப்பு ரயில்: ஆக., 9 மற்றும், 30ம் தேதிகளில், எர்ணாகுளத்தில் இருந்து, காலை, 8:50 மணிக்கு புறப்பட்டு, திரிசூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக, ஹவுரா செல்லும். ஆக., 9க்கு தற்போதும், ஆக., 30க்கு நாளை முதலும் முன்பதிவு செய்யலாம்.

சென்னை சென்ட்ரல் - ஹவுரா ஏ.சி., அதிவேக சிறப்பு கட்டண ரயில்: சென்ட்ரலில் இருந்து, ஆக., 4 மற்றும் செப்., 11 தேதிகளில், மாலை, 5:10 மணிக்கு புறப்பட்டு நெல்லுார், விஜயவாடா, ராஜமுந்திரி வழியாக, அடுத்த நாள் மாலை, ஹவுராவை அடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

பெங்களூரில் இருந்து, ஆக., 2 மற்றும் செப்., 1; நாகர்கோவிலில் இருந்து ஆக., 3 மற்றும் செப்., 2 ஆகிய தேதிகளில் புறப்படும், பெங்களூரு - நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏ.சி., பெட்டி ஒன்று தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

அதேபோல், ஐதராபாத்தில் இருந்து, ஆக., 3 மற்றும் செப்., 2; திருவனந்தபுரத்தில் இருந்து ஆக., 5 மற்றும் செப்., 4ல் புறப்படும், ஐதராபாத் - திருவனந்தபுரம் - ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில், மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Site Meter