20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 31 ஜுலை 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

பொன்னேரி பேருந்து நிலையம் அருகே தனியார் டி.ஆர்.சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்தில் தீவிபத்து

திருவள்ளூர்

பொன்னேரி பேருந்து நிலையம் அருகே தனியார் டி.ஆர்.சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்தில் தீவிபத்து தகவல்தந்தும் தீ அணைப்பு வாகணங்கள்ஆடி மாத விழாவிற்கு பெரியபாளயத்திற்கு சென்றதால் பொதுமக்களே கண்ணாடிகளை உடைத்தும் மூன்று தலங்களில் தீ பரவாமல் தடுத்து அருகில் இருந்த கடைகளில் தண்ணீரை கொண்டு வந்து போராடி தீயை அணைத்தனர்

பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்த போதிலும் பொதுமக்களின் சாதுர்யத்தாலும் அருகில் உள்ள கடைக்காரர்களின் உதவியாலும் கோடிக்கணக்கிலான மதிப்புள்ள தங்க வைர வெள்ளி நகைக் பாத்திரங்கள் கீழ் தளத்தில் இருந்த மளிகை பொருட்கள் தப்பின.

அருகிலேயே மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) இருப்பதால் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வந்த தீ அணைப்பு துறையினர் கீழ் தளம் மற்றும் மற்ற மூன்று தளங்களிலும் நெருப்பு ஜூவாலையில் வந்த புகையை கண்ணாடிகளை உடைத்து வெளியேற்றினர்.


Site Meter