20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 19 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

அமெரிக்க கோடீசுவரர் பஃப்பெட் புற்றுநோயால் அவதி

நியூயார்க், ஏப். 19-
American billionaire Warren Buffett diagnosed with cancer - World News Headlines in Tamil

அமெரிக்க கோடீசுவரர்களில் குறிப்பிடத்தக்கவர் வாரன் பஃப்பெட் (வயது 81). பெர்க்ஷயர் ஹாத்அவே நிறுவனத்தின் தலைவரான இவருக்கு ரூ.2 1/4 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. தற்போது இவர் பிராஸ்டேட் புற்றுநோயால் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து அவர் தனது பங்குதாரர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தனக்கு புற்றுநோய் பாதித்திருந்தாலும்கூட, உயிர் ஆபத்து இல்லை என்றும், தான் புத்துணர்வுடன் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். புற்றுநோய்க்காக வரும் ஜூலை மாதம் இவர் கதிரியக்க சிகிச்சை பெறப்போகிறார்.


Site Meter