22 ஜுலை, 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 3 செப்டம்பர் 2014

உலகச்செய்திகள் : Latest World News

பாகிஸ்தானில் 2 மாதங்களில் 910 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: ராணுவம் தகவல்

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின்  வட வஜ்ரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஜூன் 15 தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம்  ஆப்கானிஸ்தானின் உள்ளூர் வெளியூர் தீவிரவாதிகளுக்கு எதிராக ஷார்ப்-இ-அஸ்ப் என்ற அதிடை ஆபரேஷனை தொடங்கியது. இந்த ஆபரேஷன் மூலம்  மூலம்  910 தீவிரவாதைகள் கொல்லபட்டு உள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

மேலும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது:-

நாடு முழுவது தீவிரவாதத்திற்கு எதிராக  82 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.269 ராணுவ வீரரகள் காயம் அடைந்து உள்ளனர்.82 வீரராக்ளில் 42 பேர் வட வஜ்ரிஸ்தான் பகுதியிலும், 23 பேர் கூட்டாட்சி நிர்வாக பழங்குடி பகுதியிலும், 17 பேர் கராச்சி, மற்றும்  பலுசிஸ்தானிலும் பலியானவர்கள்.
வட வஜ்ரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளின்  , ராக்கெட் மற்றும் வெடி பொருள் தொழிற்சாலைகள் அழிக்கபட்டு விட்டன.தீவிரவாதிகளீடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள்,கைப்பற்றபட்டு உள்ளது.

வட வஜ்ரிஸ்தானில் 97,570 குடுமபங்களுக்கு 19,376 டன்  ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.இந்த பகுதியில் பன்னு, டேரா இஸ்மாயில்கான், தாங் மாவட்டம்,ஆகிய இடங்கலீல்  6 மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. என கூறப்பட்டு உள்ளது.


Site Meter