22 ஜுலை, 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 2 ஏப்ரல் 2016

உலகச்செய்திகள் : Latest World News

இலங்கையில் 101 கிலோ ஹெராயின் பறிமுதல்

இலங்கை
Navy seize 101kg of narcotics in Southern Seas - World News Headlines in Tamil

இலங்கையின் தென் கடற்பரப்பில் வெளிநாட்டவரிடமிருந்து 100 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிப்பு.

இது தொடர்பில் 10 இரானியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவி பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் நடத்தப்படுகிறது. போதைப்பொருள் முகவர்கள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல மீனவர்களை பயன்படுத்துகின்றனர், மீனவர்களின் மீன்பிடி படகுகள் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள ஹெராயின் சந்தையில் பல மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. இலங்கை உளவுத்துறையின் அளித்த தகவலின் அடைப்படையில் நடுக்கடலில் இந்தப் படகைத் தடுத்து போதைப் பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியதாகவும் அதன் பேச்சாளர் கூறுகிறார். இந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், இரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த கும்பலே, இந்தக் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்படும் போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக இலங்கையில் கைப்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Site Meter