20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 3 ஏப்ரல் 2016

உலகச்செய்திகள் : Latest World News

உலகக்கோப்பை டி-20 பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

கொல்கத்தா
West Indies beats Australia for maiden women's WT20 title - World News Headlines in Tamil

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் பெண்கள் உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணி.

இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இன்று மதியம் மூன்று மணிக்கு பெண்களுக்கான இறுதிப்போட்டி தொடங்கியது. இதில் மேற்கிந்திய தீவுகள் - அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் மெக் லன்னிங் மற்றும் வில்லனி ஆகியோர் தலா 52 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டாற்றின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைக் குவித்து இலக்கை எட்டியது. மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹேலே அபாரமாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 59 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹேலே மேத்யூஸ் 66 ரன்னும், டெய்லர் 59 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஃபர்ரெல் மற்றும் பீம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் முதல்முறையாக டி 20 உலகக் கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.


Site Meter